Home
News

அம்பானி போட்ட ஆர்டர்.. அன்லிமிடெட் டேட்டாவை அள்ளி தரும் Jio திட்டங்கள்.. ரூ.198 விலை முதல்.. எந்த திட்டம்?

ஜியோ வாடிக்கையாளர்களை (Jio Customers) குஷி அடைய செய்யும் வகையிலான புதிய அறிவிப்பை முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில், ஒரு ப்ரீபெய்ட் திட்டம் என்றால் அதில் எப்படி அன்லிமிடெட் அழைப்பு நன்மை மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறதோ, அதே அளவில் இப்போது டேட்டா நன்மையையும் மக்கள் மிக முக்கியமான நன்மையாக பார்க்க துவங்கிவிட்டார்கள். இந்தியாவில் இப்போது குறைந்தது தினசரி 1GB டேட்டா முதல் அதிகப்படியாக 3GB டேட்டா வரை பயன்படுத்தும் ஜியோ வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் டேட்டா பற்றாக்குறை இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

இதனை சரி செய்ய கோரி, ஜியோ நிறுவனத்திற்கு அம்பானி போட்ட ஆர்டரின் பெயரில், ஜியோ நிறுவனம் இப்போது அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்கும் 4 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு திட்டங்கள் ரூ. 500 மலிவு விலை விருப்பங்களையும் மற்றும் இரண்டு திட்டங்கள் அதிக நன்மை கொண்ட ரூ. 1000 விலை மதிப்பை கொண்ட திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அம்பானி போட்ட ஆர்டர்.. அன்லிமிடெட் டேட்டாவை அள்ளி தரும் Jio திட்டங்கள்

அம்பானி போட்ட ஆர்டர்.. அன்லிமிடெட் டேட்டாவை அள்ளி தரும் Jio திட்டங்கள்:

அன்லிமிடெட் டேட்டா என்று கூறுகையில், இந்த திட்டங்கள் உங்களுக்கு தினசரி ஹை ஸ்பீட் டேட்டா (Daily High Speed Data) நன்மையை வழங்குவதோடு, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) நன்மையையும் வழங்குகிறது. ஜியோ தற்போது வழங்கும் முதல் திட்டம் ரூ. 198 விலையுடன் வருகிறது. அதிகப்படியான விலை கொண்ட திட்டமாக ரூ. 1029 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சரி, இப்போது எந்த திட்டம் என்ன நன்மையை வழங்குகிறதென்று பார்க்கலாம்.

1. ஜியோ ரூ. 198 திட்டம் (Jio Rs 198 Plan):
இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையுடன், அன்லிமிடெட் டேட்டா நன்மை, தினமும் 100 SMS நன்மை போன்றவற்றை 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. உங்கள் ஏரியாவில் ஜியோ 5ஜி (Jio 5G) அணுக கிடைக்கிறதென்றால், வரம்பில்லாத அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை பயன்படுத்தலாம்.

2. ஜியோ ரூ. 448 திட்டம் (Jio Rs 448 Plan):
இந்த திட்டம் 28 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. இதன் மூலம் மொத்தமாக 56GB டேட்டா கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை ஜியோ வழங்குகிறது. ஜியோ 5ஜி கிடைக்கும் வட்டத்தில் உள்ள பயனர்கள் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும். கூடுதலாக Sony Liv மற்றும் Zee5 போன்ற இலவச சந்தாவும் கிடைக்கும்.

3. ஜியோ ரூ. 1028 திட்டம் (Jio Rs 1028 Plan):
இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையுடன், அன்லிமிடெட் டேட்டா நன்மை, தினமும் 100 SMS நன்மை போன்றவற்றை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இது 168GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் ஜியோ 5ஜி ஏரியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயன்படுத்த கிடைக்கும். கூடுதல் நன்மையாக ஜியோவின் சந்தா மற்றும் ஸ்விக்கி சந்தா கிடைக்கும்.

4. ஜியோ ரூ. 1029 திட்டம் (Jio Rs 1029 Plan):
இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் டேட்டா நன்மை, தினமும் 100 SMS நன்மை போன்றவற்றை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இது 168GB டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் சேர்ப்பாக இந்த திட்டத்துடன் OTT சந்தாவும் கிடைக்கிறது. இதில் அமேசான் பிரைம் வீடியோ கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan Jio Rs 448 Plan Jio Rs 1028 Plan Jio Rs 1029 Plan with Unlimited 5G Data Under Rs 500 and Rs 1100
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X