இதுதாங்க Jio ரீசார்ஜ்.. ரூ.198-க்கு இறக்கியாச்சு.. பஞ்சமில்லாத டேட்டா, வாய்ஸ்.. இனிமே ப்ரீபெய்ட் ரீசார்ஜ்!
ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் கேமிங் பிரியர்களாக இருந்தால், அவர்களுக்கு 14 நாட்கள், 28 நாட்கள், 56 நாட்கள், 70 நாட்கள் மற்றும் 72 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை கொடுக்கும் திட்டங்கள் இருக்கின்றன. வெறும் ரூ.198 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் முதல் அன்லிமிடெட் டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையையும் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) முழு விவரங்களை கேமிங் பிரியர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ 198 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 198 Recharge Plan): அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் (Unlimited 5G Data) அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. 14 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிலெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (2GB Data) மற்றும் 100 எஸ்எம்எஸ்களை (SMS) கொடுக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ ரூ 349 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 349 Recharge Plan): அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ஆரம்ப திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 629 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 629 Recharge Plan): அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் 56 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த 5ஜி டேட்டா சலுகை போக முந்தைய திட்டங்களை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பெறலாம்.
ஜியோ ரூ 719 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 719 Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் முந்தைய திட்டங்களைவிட கூடுதலாக வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 70 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கணக்கில் மொத்தமாக 140 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம், மேலும் 100 எஸ்எம்எஸ்கள் வருகின்றன.
அதேபோல இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வருகின்றன. இதேபோல சலுகையில் கூடுதல் டேட்டா வேண்டுமானால், ஜியோவில் கிடைக்கும் ரூ 749 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் 20 ஜிபி இலவச டேட்டாவும் கிடைக்கிறது.
ஜியோ ரூ 749 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 749 Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முந்தைய திட்டத்தில் கிடைத்த ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால், 72 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டடா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை 72 நாட்கள் முழுவதும் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 20 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இந்த 20 ஜிபி டேட்டா முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இது லம்ப்-சம் சலுகையில் கிடைப்பதால் லிமிட் இல்லாமல் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் உள்ளன. அனைத்து திட்டங்களுக்கும் ஜியோ டிவி சந்தா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








