Home
News

Airtel, Vi, BSNL-க்கு கும்பிடு.. ரூ.200 க்கு இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2ஜிபி டேட்டா.. வேலிடிட்டி?

ஏர்டெல் (Airtel), விஐ (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்கள் கனவிலும் கொடுக்க முடியாத சலுகைகளுடன் முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் ஆனது ரூ.198 விலை கொண்ட திட்டத்தை கொடுக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளது. இந்த திட்டத்தின் டேட்டா, வேலிடிட்டி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனமானது, நாடு முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுத்து வருகிறது. ஏர்டெல் நிறுவனமும் ஜியோவுக்கு நிகராக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்களுக்கு கொடுத்து வருகிறது. ஆனால், மாதாந்திர கேப் ஏர்டெல்லில் இருக்கிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே வோடபோன் ஐடியா நிறுவனமானது, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது.

Airtel, Vi, BSNL-க்கு கும்பிடு.. ரூ.200 க்கு இறக்கிய அம்பானி.. வாய்ஸ்!

இந்த நிறுவனமும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு மாதாந்திர கேப் வைத்துள்ளது. ஆனால், ஜியோவில் எந்த மாதாந்திர கேப்பும் கொடுக்கப்படவில்லை. இந்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனமும், 5ஜி டேட்டாவை டெஸ்டிங் மட்டுமே செய்து வருகிறது. இந்த நிலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை எந்த நிறுவனம் மலிவாக கொடுக்கிறது என்பது முக்கியமாகும்.

இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமானது, மற்ற நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டது. ஏனென்றால், ரூ.198 விலை கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. மற்ற நிறுவனங்களில் ரூ.300 விலையில் மட்டுமே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, ரூ.100 விலை குறைவாக ஜியோ நிறுவனம் கொடுத்து உள்ளது.

இதில் மாதாந்திர கேப் கொடுக்கப்படவில்லை. ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும், தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. ஜியோ நிறுவனத்தின் ஆப்களின் அணுகலும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.198 திட்டம் அன்லிமிடெட் 5ஜி (Jio Rs 198 Plan Unlimited 5G): ஜியோ நிறுவனத்தின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களின் கீழ் ஆரம்ப விலை திட்டமாக இது இருக்கிறது. இதை பெறும் கஸ்டமர்களுக்கு 14 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். தினசரி டேட்டாவை பார்க்கையில், 2 ஜிபியாக இருக்கிறது.

இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படுவதால், தீர்ந்து போன பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் அணுகல் மற்றும் ஜியோ டிவி அணுகல் கிடைக்கும். இந்த வேலிடிட்டி பத்தாமல் போனால், ரூ.349 திட்டத்துக்கு செல்லலாம்.

ஜியோ ரூ.349 திட்டம் அன்லிமிடெட் 5ஜி (Jio Rs 349 Plan Unlimited 5G): ஜியோ நிறுவனத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஆரம்ப விலை அன்லிமிடெட் 5ஜி திட்டமாக இது இருக்கிறது. இதில் கிடைக்கும் சலுகைகள் முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக இருக்கிறது. 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவும் இதற்கு பொருந்தும்.

லோக்கல் (Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கும். 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவானது, 3 மாதங்களுக்கு கொடுக்கப்படும். 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் ஜியோஏஐகிளவுட் (Jio AI Cloud) வழியாக கொடுக்கப்படும். மேலும், ஜெமினி ப்ரோ (Gemini Pro) அணுகல் 18 மாதங்களுக்கு கொடுக்கப்படும். ஆகவே, இதில் கூடுதலாக ஓடிடி சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan 2 GB Data 14 Days Validity Jio Customers Need To Know This Unlimited 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X