Home
News

பழையபடி ரூ.200 க்கு ரீசார்ஜ்.. 2026 ஆரம்பமே முடிச்சுவிட்ட அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா!

ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொடுக்காத விலையில் இருக்கும் திட்டங்கள் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் ரூ.198 செலவில் கிடைத்த ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பழைய விலையில் 2026 ஆம் ஆண்டிலும் கிடைக்கிறது.

இந்திய டெலிகாம் மார்கெட்டிலேயே மலிவான அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமாக (Cheapest Unlimited 5G Data Plan) ஜியோ நிறுவனத்தின் ரூ.198 திட்டம் இருக்கிறது. ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் ரூ.200 விலைக்கு கீழ் அன்லிமிடெட் 5ஜி திட்டங்களே கிடையாது. குறைந்தபட்சம் ரூ.300 விலைக்கும் மேல் மட்டுமே கிடைக்கிறது.

பழையபடி ரூ.200 க்கு ரீசார்ஜ்.. 2026 ஆரம்பமே முடிச்சுவிட்ட அம்பானி!

2024 ஆம் ஆண்டில் இந்த ஜியோ ரூ.198 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 5ஜி டேட்டாவுக்கு டெலிகாம் கஸ்டமர்களை மாற்ற இந்த மலிவான விலையிலான திட்டத்தை ஜியோ நிறுவனம் கொடுத்தது. 2025 ஆம் ஆண்டு டெலிகாம் கட்டணங்கள் உயரும்போது, இந்த திட்டத்தின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால், ஜியோ நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

மாறாக மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தை நீக்கியது. டேட்டா திட்டங்களின் சலுகையை குறைத்தது. ஆகவே, 2026 ஆம் ஆண்டிலேயே டெலிகாம் கட்டண உயர்வு இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால், 2026 ஆம் ஆண்டு தொடங்கியும், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொடுக்க முடியாத அதே பழைய ரூ.198 விலைக்கே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஜியோ நிறுவனம் கொடுத்து முடித்துள்ளது.

ஜியோ ரூ. 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா போக 14 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கும். ஆகவே, 28 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுடன் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் கொடுத்துள்ளது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுள்ளது. ஜியோ டிவி சலுகை கிடைத்துள்ளது. ஜியோ ஏஐ கிளவுட் சலுகையையும் பெற்று கொள்ளலாம். 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால் ரூ.349 திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ. 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): 2026 ஆம் ஆண்டில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் (28 Days Validity) கிடைக்கும் ஆரம்ப விலை அன்லிமிடெட் 5ஜி திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கொண்டுள்ளது.

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கிடைக்கும். 100 எஸ்எஸ்எஸ்கள் கிடைக்கும். ஜியோ டிவி (Jio TV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் போக மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜியோஹோம் (JioHome) சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 198 Plan 14 Days Validity Unlimited 5G Data Same Price From 2025 Continues in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X