Home
News

மறுபடியும் ரூ.195-க்கு இறக்கிய அம்பானி.. 90 நாட்கள் வேலிடிட்டி.. 15 ஜிபி டேட்டா.. OTT சந்தா.. வாய்ஸ் கால்கள்?

ரிலையன்ஸ் ஜியோவில் (Reliance Jio) அதிக விலைக்கு திட்டம் இருப்பதால், கஸ்டமர்கள் கடுப்பான நிலையில் அடிமட்ட விலைக்கு 90 நாட்கள் வேலிடிட்டி, 15 ஜிபி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி (OTT) சந்தாவுடன் புதிய திட்டம் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் (SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் இருக்கிறதா? ஓடிடி சந்தாவுக்கு எத்தனை நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோவில் அடிமட்ட விலைக்கு கிடைத்தன. ஆனால், ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் இணைக்கப்பட்டு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடியாக மாற்றப்பட்டதால், இந்த சந்தாவுடன் ஒரே திட்டம் மட்டுமே ஜியோவில் களமிறக்கப்பட்டது.

மறுபடியும் ரூ.195-க்கு இறக்கிய அம்பானி.. 90 நாட்கள் வேலிடிட்டி!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ 949 ஆக இருந்தது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமானால், ஆப்ஷனே இல்லாமல் கிட்டத்தட்ட ரூ 1000 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா போன்ற சலுகைகள் கிடைத்தாலும் விலை கட்டுப்படியாக இருக்கவில்லை.

இதனால் கஸ்டமர்கள் கடுப்பாவதை அறிந்த ஜியோ நிறுவனம், விட்டுக்கொடுக்கும்படி வெறும் ரூ 195 விலைக்கு ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கொண்ட திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த விலைக்கு 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கும் என்று நினைத்தால், 90 நாட்களுக்கு கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ ரூ 195 திட்ட விவரங்கள் (Jio Rs 195 Plan Details): இந்த திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, லம்ப்-சம் டேட்டா மற்றும் ஓடிடி சந்தாவை மட்டுமே கிடைக்கிறது. 15 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது.

இந்த டேட்டாவுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, உங்களிடம் ஆக்டிவாக இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்திலும் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும். இந்த வேலிடிட்டி போலவே ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு இந்த ஓடிடி சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இது மொபைல் சலுகையை கொடுக்கிறது.

இந்த திட்டத்துக்கு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இந்த டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளும் வேண்டும் கூடவே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு அடுத்த ஆப்ஷனாக ஜியோ ரூ 949 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதைவிட்டால் வேறு திட்டம் இல்லை.

ஜியோ ரூ 949 திட்ட விவரங்கள் (Jio Rs 949 Plan Details): இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 2 ஜிபி டேட்டா (2GB Data), 100 எஸ்எம்எஸ்கள் (SMS), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 195 Plan With 90 Days Validity 15GB Data JioHotstar Mobile Subscription Check New Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X