கவனிச்சீங்களா? Jio ரீசார்ஜ்ஜில் மாற்றம்.. இரவோடு இரவாக மாறிய நன்மை.. எந்த 2 திட்டம்? என்ன மாற்றம்?
ஜியோ (Jio) நிறுவனம் தனது கோடி கணக்கான வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு புதிய மாற்றத்தை இரவோடு இரவாக மாற்றியுள்ளது. ஜியோ நெட்வொர்க்கின் (Jio networks) கீழ் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி (validity) நன்மையை நிறுவனம் தற்போது மாற்றி அமைத்துள்ளது. எந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் (Jio prepaid recharge plans) ஜியோ நிறுவனம் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளது என்று தெளிவாக பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் அண்மையில் புதிதாக ஜியோ ரூ. 19 திட்டம் (Jio Rs 19 Plan) மற்றும் ஜியோ ரூ. 29 திட்டம் (Jio Rs 29 Plan) ஆகிய இரண்டு மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டங்களை பல கோடி ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் (Jio prepaid customers) ரீசார்ஜ் செய்து, பயனடைந்து வந்தார்கள். ஆனால், இப்போது, ஜியோ நிறுவனம் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மையில் சில நம்ப முடியாத மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.

கவனிச்சீங்களா? Jio ரீசார்ஜ்ஜில் மாற்றம்.. இரவோடு இரவாக மாறிய நன்மை:
1. ஜியோ ரூ. 19 திட்டம் (Jio Rs 19 Plan):
Jio 19 Plan ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும் (Jio data voucher plan). இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் இதற்கு முன்பு, ஜியோ வாடிக்கையாளர்களின் அடிப்படை திட்டத்தின் வேலிடிட்டி உடன் ஒத்துப்போனது. உதாரணமாக, உங்கள் அடிப்படை ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 84 days validity plan) உடன் வருகிறது என்றால், இந்த ஜியோ 19 திட்டத்தின் செல்லுபடியும் 84 நாட்கள் வரை கிடைத்தது. ஆனால், இனி அப்படி இருக்க போவதில்லை.
காரணம், ஜியோ நிறுவனம் ஜியோ ரூ. 19 பிளான் (Jio Rs 19 Plan) திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. இரவோடு இரவாக மாறிய புதிய விதிமுறைப்படி, ஜியோவின் 19 ரூபாய் டேட்டா வவுச்சர் திட்டம் இனி 1 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (Jio 1 day validity data voucher paln) மட்டுமே வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 1 நாளுக்கு 1GB டேட்டா நன்மையை (1GB data benefit) வழங்குகிறது.
2. ஜியோ ரூ. 29 திட்டம் (Jio Rs 29 Plan):
Jio 19 திட்டம் போல நிறுவனம் வழங்கிய மற்றொரு மலிவு விலை டேட்டா வவுச்சர் திட்டம் (Jio low price data voucher) தான் இந்த ஜியோ ரூ. 29 திட்டம். ஜியோ ரூ. 29 திட்டம் (Jio Rs 29 Plan) இப்போதும் அதே 2GB டேட்டா நன்மையை தான் வழங்குகிறது. இந்த திட்டமும் முன்பு, ஜியோ 19 திட்டத்தின் அதே வேலிடிட்டி நன்மையை போல் தான் செயல்பட்டு வந்தது.
ஆனால், இனி இந்த திட்டம் வெறும் 2 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ நிறுவனத்தின் வலைப்பக்க தகவல் தெரிவிக்கிறது. தினசரி டேட்டா நன்மை கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தி வந்த ஜியோ மக்கள் மற்றும் டேட்டா தேவைக்கேற்ப அடிப்படை டேட்டா வவுச்சர்களை அவசர தேவைக்காக பயன்படுத்திய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த வேலிடிட்டி மாற்றம் பெரிய மாற்றமாக இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








