Home
News

விட்டுக்கொடுத்த அம்பானி.. மாதாந்திரம் ரூ.172-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. Jio-க்கு குஷி!

இந்தியா முழுவதும் 4ஜி சேவைக்கு நிர்ணயிக்கப்பட்ட டெலிகாம் (Telecom) கட்டணங்களில் யாரும் கொடுக்க முடியாத விலைக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கொடுத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதியில் நடந்த கட்டண உயர்வுக்கு பிறகு பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலையில் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.172 மாதாந்திர செலவில் வருடாந்திர சலுகைகள் வருகின்றன.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு பிறகு டெலிகாம் கஸ்டமர்கள், எந்த நிறுவனத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டங்களுக்கு மலிவான விலை கிடைக்கிறது என்பதை அலசி ஆராய தொடங்கிவிட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனமே அப்படி மலிவான விலைக்கு திட்டங்களை கொடுப்பதால், அதற்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விட்டுக்கொடுத்த அம்பானி.. மாதாந்திரம் ரூ.172-க்கு 336 நாட்கள் சேவை!

ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை நாடு முழுவதும் தொடங்கவில்லை. ஆகவே, வாய்ஸ் கால்கள் திட்டம் மட்டுமே இப்போதைக்கு பிஎஸ்என்எல்லில் மலிவாக கிடைக்கிறது. இந்த வாய்ஸ் கால் சலுகையையும் விட்டு வைக்காதபடி ஜியோ நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை இறக்கி இருக்கிறது. இந்தியாவில் பெஸ்ட் வருடாந்திர 4ஜி திட்டம் இப்போதைக்கு இதுதான்.

ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு எந்தவித குறையும் கிடையாது. அதாவது, 11 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் சிம் கார்டை ஆக்டிவாக (SIM Card Active) வைத்திருக்கலாம்.

சொல்லப்போனால், மாதம் வெறும் ரூ.172 செலவு செய்தால், இந்த சலுகையை பெற்று கொள்ள முடிகிறது. இதுபோக லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஜியோ ரூ 1899 திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். லிமிட் இல்லாமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

அதேபோல 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கிடைக்கிறது. அதாவது, 336 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே 24 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தினாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை வழங்கப்படும். வேலிடிட்டி முடியும் போதுதான் இந்த ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா முடியும்.

ஜியோ ஆப்களின் சலுகையை பார்க்கையில், வழக்கமாக வரும் ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சலுகை கிடைக்கிறது. இதில் ஜியோசினிமாவுக்கு பிரீமியம் சலுகை கொடுக்கப்படவில்லை. இந்த விலைக்கு 4ஜி சேவையை வழங்கி வரும் வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களில் திட்டமே கிடையாது.

அதே நேரத்தில் மலிவான விலைக்கு திட்டங்களை வைத்திருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 4ஜி வேகம் மற்றும் இந்தியா முழுவதும் 4ஜி கவரேஜ் கிடையாது. ஆகவே, மலிவான விலைக்கு வருடம் முழுவதும் நல்ல சலுகை மற்றும் வேகம் வேண்டுமானால், இந்த ஜியோ ரூ 1899 திட்டத்தை கண்ணை மூடிக் கொண்டு கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதற்கு அடுத்ததாக வருடாந்திர திட்டம் வேண்டுமானால், ரூ 3599 செலவு செய்தால் மட்டுமே ஜியோவில் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதேபோல ஜியோ ஆப்களின் சலுகையையும் பெற்று கொள்ளலாம். ஓடிடி ஆப்களின் சந்தா கிடையாது. 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1899 Plan With Unlimited Voice Call 24GB Data 336 Days Validity Cheapest Annual Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X