Home
News

Jio போட்ட போடு.. மாதம் ரூ.158 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 24 ஜிபி டேட்டா!

ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டாலும், மலிவான விலைக்கு அதிகப்படியான சலுகைகள் கொண்ட திட்டத்தை ஜியோ கைவிடவில்லை. மற்ற நிறுவனங்களில் வேலிடிட்டி மற்றும் டேட்டா சலுகைகள் அதிகமாக கொடுக்கப்பட்டாலும், ஜியோவின் அதிவேகம் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகள் வேறெந்த நிறுவனங்களின் திட்டங்களிலும் கிடைக்காது. இப்போது, மாதத்துக்கு வெறும் ரூ.158 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது ஜியோ நிறுவனம். இப்படி மூன்று வேல்யூ திட்டங்களை ஜியோ வைத்திருக்கிறது. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): ஜியோ திட்டங்களின் விலை அதிகரிப்புக்கு பிறகு மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டம் இதுவாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் வழக்கமான ஜியோ ஆப்களின் சலுகைகள் கிடைக்கின்றன.

Jio போட்ட போடு! மாதம் ரூ.158 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ்!

ஆகவே, இந்த புதிய வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் தினசரிக்கு எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

அதேபோல டேட்டாவும் தினசரிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், 24 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 24 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதாவது, 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மேல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களுக்கு செல்லலாம்.

இந்த மூன்று சலுகைகளும் போக ஜியோ நிறுவனம் வழங்கும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களின் சலுகைகளை பயன்படுத்தலாம். இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்துக்கான மாதாந்திர செலவானது, வெறும் ரூ.158ஆக மட்டுமே இருக்கிறது. வருடம் முழுவதும் வாய்ஸ்கள் வேண்டுமானால், இது பெஸ்ட் ஆப்ஷன்.

ஜியோ ரூ 479 திட்ட விவரங்கள் (Jio Rs 479 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், 1000 எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் டேட்டா சலுகையை பார்க்கையில், 6 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த 6 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை பெறலாம். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இப்போது மிகவும் மலிவான விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பார்க்கலாம்.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் மாதாந்திர சலுகையை கொடுக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். அதேபோல 300 எஸ்எம்எஸ்களை ஜியோ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். டேட்டா சலுகையும் இந்த திட்டத்தில் இருக்கிறது.

ஆகவே, 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளாம். அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். முந்தைய திட்டங்களை போலவே இந்த திட்டத்துக்கும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகைகள் பொருந்தும். இந்த மூன்று திட்டங்களும் ஜியோவின் வேல்யூ பட்டியலின் கீழ் வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1899 Plan With 336 Days Validity, Unlimited Voice Calls, 24GB Data Check Value Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X