Home
News

முடிச்சிட்டீங்க போங்க.. மாதம் ரூ.172-க்கு ஆண்டு முழுவதும் வேலிடிட்டி.. அம்பானி கொடுத்த திட்டம்.. குஷியில் Jio!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு மத்திய தொலைத்தொடர்பு துறையின் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு கூட்டம்கூட்டமாக கஸ்டமர்கள் மாறி வருகின்றனர். மாதத்துக்கு வெறும் ரூ.136 செலவில் 336 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கிவிட்டு கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கியது பிஎஸ்என்எல்தான். ஆனால், ஜியோ நிறுவனம் அதை தவிடுபொடி செய்துவிட்டது.

உண்மையில், மிகவும் மலிவான விலைக்கு பிஎஸ்என்எல் திட்டங்களை வைத்திருந்தாலும், அதில் 4ஜி வேகத்தில் டேட்டா சேவை என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், ஜியோவில் கதையே வேறு. இருப்பினும், பிஎஸ்என்எல்லுக்கு நிகராக ஒரு மலிவான வருடாந்திர திட்டத்தை ஜியோ கொடுத்துள்ளது. இந்த திட்டம் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் மலிவான வருடாந்திர 4ஜி திட்டமாகும்.

முடிச்சிட்டீங்க போங்க.. மாதம் ரூ.172-க்கு ஆண்டு முழுவதும் வேலிடிட்டி.!

ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): இந்த மலிவு விலை வருடாந்திரட திட்டத்தில் (Cheapest Yearly Plan) 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 11 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோ ஆப்களின் (Jio) ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ள முடியும். 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டா லம்ப்-சம் முறையில் கிடைக்கிறது. ஆகவே, தினசரி லிமிட் கிடையாது. 336 நாட்கள் வேலிடிட்டியில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் கால்களுக்கு லிமிட் கிடையாது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும்.

டேட்டாவை போலவே 3600 எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கிடைக்கிறது. இதை தேவைக்கு ஏற்ப 11 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோவில் மட்டுமே கிடைக்கும் ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சலுகை கிடைக்கிறது. 24 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டாவை பெறலாம்.

ஆகவே, 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சேவை கொடுக்கப்படும். இந்த ஜியோ வருடாந்திர திட்டத்துக்கான மாத செலவு வெறும் ரூ.172ஆக மட்டுமே இருக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு பிஎஸ்என்எல்லில் 336 நாட்கள் திட்டம் இருக்கிறது. ஆனால், ஜியோவில் கிடைக்கும் 4ஜி வேகம் மற்றும் நாடு முழுவதும் எச்டி கால் கவரேஜ் அதில் எதிர்பார்க்க முடியாது.

பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்துக்கும் ஜியோவை போலவே 336 நாட்களுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். முந்தைய திட்டத்தை போலவே 24 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், 4ஜி வேகம் கிடையாது.

4ஜி சேவைகள் கிடைக்கும் சில பகுதிகளில் வேண்டுமானால், அதை எதிர்பார்க்கலாம். மேலும், ஜியோவை போல ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா இதில் கிடையாது. 24 ஜிபிக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும். 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு செய்து கொள்ள முடியும். இந்த வருடாந்திர திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.136 மட்டுமே செலவாகிறது. ஆனால், ஜியோவின் வேகத்துக்கு ஈடாகாது.

ஒருவேளை அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கலாம். ஆகவே, 11 மாதங்களுக்கு டேட்டாவை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். அதேபோல 4ஜி வேகமும் கிடையாது. ஆனால், ஜியோவில் ரூ.19 முதல் 4ஜி டேட்டா பேக்குகள் கிடைக்கின்றன. எனவே, தேவைக்கு ஏற்ப 4ஜி வேக டேட்டாவை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1899 Plan With 336 Days Validity Unlimited Calls 24GB Data Cheapest Yearly Plan Rival To BSNL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X