Home
News

Jio ஆட்டம் ஆரம்பம்.. மாதம் ரூ. 173 மட்டுமே.. 336 நாள் வேலிடிட்டி.. போன கூட்டம் எல்லாம் திரும்ப ஜியோ பக்கம்..

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் Vi என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் மொபைல் ரீசார்ஜ் விலைகளை உயர்த்தியது. திடீர் விலை ஏற்றம், பல பயனர்களை BSNL பக்கம் மாற வழிவகுத்தது. இதற்கு பதிலடியாக, ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரூ. 200 விலைக்குள் சில திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிட்டு கூறும்படியாக ஜியோ நிறுவனம் ஒரு அட்டகாசமான திட்டத்தை மாதம் வெறும் ரூ. 173 கட்டணத்துடன் வழங்கியுள்ளது.

ரூ. 200 விலைக்குள் இப்போது நீங்கள் ஒரு பெஸ்டான ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Prepaid Plans) தேடுகிறீர்கள் என்றால், கட்டாயம் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் தான் மிக சிறந்த தேர்வாக அமையும். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது ரூ. 173 கட்டணத்துடன் உங்களுக்கு 336 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. வழக்கமான 28 நாள் செல்லுபடியாகும் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் மலிவானது.

Jio ஆட்டம் ஆரம்பம்.. மாதம் ரூ. 173 மட்டுமே.. 336 நாள் வேலிடிட்டி..

Jio ஆட்டம் ஆரம்பம்.. மாதம் ரூ. 173 மட்டுமே.. 336 நாள் வேலிடிட்டி:

குறைந்தளவு வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்வதை காட்டிலும், டெலிகாம் பயனர்கள் எப்போதும் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வது தான் லாபகரமானது. காரணம், மொத்தமாக நீங்கள் ஏறக்குறைய 1 ஆண்டு அல்லது அரை ஆண்டிற்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது, மாதாந்திர திட்டங்களை காட்டிலும் இவற்றின் விலை மிகவும் மலிவானதாக இருக்கிறது என்பதே உண்மையாகும். ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ள திட்டம் ஏன் சிறந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.1,899 திட்டம் (Jio Rs 1899 Plan):

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,899 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1899 Plan) பற்றியது. இந்த திட்டம் 336 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இது இலவச தேசிய ரோமிங் மற்றும் தினசரி வரம்பு இல்லாமல் 24 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

கூடுதலாக, இந்த திட்டம் பயனர்கள் 3600 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோவின் பயன்பாடுகளுக்கான ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகளுக்கும் இலவச அணுகலை வழங்குகிறது. சிலருக்கு ரூ. 1899 என்பது ஒரு பெருந்தொகையாக தெரியலாம். ஆனால், இதை நாம் பிரித்து பார்க்கையில், ஒரு மாதத்திற்கும் வெறும் ரூ. 173 மட்டுமே செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ 189 திட்டம் (Jio Rs 189 PLan):

இந்த விலைக்கு மிக நெருக்கமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டம் தான் ஜியோ ரூ 189 ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 189 PLan). இந்த திட்டம் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, இலவச ரோமிங் மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோவின் துணை பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. இது வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகிறது.

28 நாட்கள் பிறகு, நீங்கள் மீண்டும் இதே திட்டத்தையே அல்லது இதை விட விலை அதிகமான திட்டத்தையோ தான் தேர்வு செய்வீர்கள். ஒரு வேலை நீங்கள் ரூ.1899 திட்டத்தை தேர்வு செய்தால், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ. 173 மட்டுமே கட்டணமாக செலவாகிறது. இந்த திட்டத்தை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், 11 மாதம் வரை உங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது என்பது சிறப்பான விஷயமாகும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 1899 Plan With 336 Days Validity Costs Only Rs 173 Per Month Goes Viral In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X