ஆட்டமெல்லாம் ஓவர்.. இனிமே அம்பானி ஆட்டம்.. போட்டியே இல்லாத 365 நாட்கள் திட்டம்.. Jio-வின் அதிரடி ஆரம்பம்!
ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களின் கொடுக்க முடியாத விலையில், பிஎஸ்என்எல்லில் (BSNL) கிடைக்காத டேட்டா வேகத்தில் ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் தட்டித்தூக்கும் விதமான வருடாந்திர திட்டத்தை மாதம் வெறும் ரூ.172 விலையில் களமிறக்கி இருக்கிறது ஜியோ (Jio) நிறுவனம். இந்த 365 நாட்கள் திட்டம் போட்டிக்கு ஆளே இல்லாமல் டெலிகாம் மார்கெட்டை பிடிக்கப்போகிறது. இதேபோல மற்ற நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான மலிவு விலையில் 3 ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) ஜியோ வைத்திருக்கிறது.
டெலிகாம் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மீது கஸ்டமர்களின் கவனம் சென்றுவிட்டது. மிகவும் மலிவான விலைக்கு திட்டங்கள் கிடைப்பதால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவைவிட பிஎஸ்என்எல் தான் பெஸ்ட் என்னும் எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால், உண்மையில் வாய்ஸ் கால் சலுகைகளுக்கு மட்டுமே பிஎஸ்என்எல் பொருத்தமாக இருக்கும்.

மொபைல் பேங்கிங், சோஷியல் மீடியா, ஆன்லைன் கேமிங் போன்ற இந்த அதிவேக டேட்டா தேவைப்படும் காலத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றளவும் 80 சதவீதத்துக்கும் அதிகமாக 2ஜி மற்றும் 3ஜி சேவைகளையே வழங்கி வருகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் வந்த பிறகே அது மற்ற நிறுவனங்களுக்கு போட்டிக்கொடுக்க முடியும். இப்போதுவரை பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டியிலேயே இல்லை என்பதே உண்மை.
இப்படி இருந்தும்கூட பிஎஸ்என்எல் போலவே வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை ஜியோ வைத்திருக்கிறது. இந்த திட்டங்கள் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைவிட கூடுதல் வேக டேட்டா சலுகையையும் கொடுக்கிறது. இதில் 28, 84 மற்றும் 336 என்று மலிவான விலையில் வேலிடிட்டிகள் கிடைக்கிறது.
ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு வெறும் ரூ.172 செலவில் இந்த மூன்று சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 24 ஜிபி டேட்டா வருகிறது.
இந்த 24 ஜிபி டேட்டாவானது, 336 நாட்களுக்கும் பொருந்தும். இதற்கிடையில் முழுவதும் பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் மொத்தமாக வருகிறது. ஆனால், வாய்ஸ் கால்களுக்கு எந்தவிட குறையும் இருக்காது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 479 திட்ட விவரங்கள் (Jio Rs 479 Plan Details): இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 1000 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. 6 ஜிபி டேட்டா மற்றும் முந்தைய திட்டத்தை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): ஜியோவில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் மாதாந்திர திட்டம் இதுவாகும். 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. இந்த மூன்று மலிவு விலை திட்டங்களுக்கும் ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








