2025 நம்ம கையில.. மாசத்துக்கு ரூ.172 கொடுங்க.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. வேல்யூனா இதுதான்!
ஒட்டுமொத்த ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கும் வேல்யூ திட்டங்கள் (Value Plan) அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. சொல்லப்போனால், 2025ஆம் ஆண்டில் அடிமட்ட விலைக்கு தொடங்கும் திட்டங்கள் இவை மட்டுமேயாகும். மாதத்துக்கு வெறும் ரூ.172 செலவில் வருடம் முழுவதும் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். இந்த ஜியோ வேல்யூ திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோவில் சிம் ஆக்டிவ் (SIM Active) மற்றும் வாய்ஸ் கால்களுக்கு (Voice Calls) மட்டும் பிரத்யேகமாக ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plans) இருக்கின்றன. ஜியோ வெப்சைட்டில் வேல்யூ திட்டங்களின் கீழ் இவற்றை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ரூ.1899 ப்ரீபெய்ட் திட்டங்கள் இதில் இருக்கின்றன.

ஜியோ ரூ 1899 திட்டம் வருடாந்திர வேலிடிட்டி (Jio Rs 1899 Plan Yearly Validity): இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை பெரிதாக இருக்காது. 336 நாட்களுக்கும் மொத்தமாகவே 24 ஜிபி டேட்டா மட்டுமே கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
ஆனால், வாய்ஸ் கால்கள் சலுகை அப்படியில்லை. கிட்டத்தட்ட 12 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Ulinited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roming Voice Calls) சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் உங்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைத்து விடுகிறது. இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.172 மட்டுமே செலவாகும்.
மற்ற சலுகைகளை பார்க்கையில், 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். டேட்டாவை போல எஸ்எம்எஸ் சலுகைகளும் மொத்தமாக கிடைக்கிறது. ஆகவே, 3600 எஸ்எம்எஸ்கள் 336 நாட்களுக்கும் மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோ டிவி (Jio TV) கிடைக்கிறது.
மேலும், ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையும் இருக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு வேல்யூ திட்டம் தேவைப்பட்டால், மூன்று மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கும் ரூ 479 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
ஜியோ ரூ 479 திட்டம் வருடாந்திர வேலிடிட்டி (Jio Rs 479 Plan Quarterly Validity): இந்த வேல்யூ திட்டத்தில் உங்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். அதேபோல டேட்டாவும், எஸ்எம்எஸ் சலுகையும் இருக்கிறது. ஆகவே, இதை ரீசார்ஜ் செய்தால், முந்தைய திட்டத்தை போல வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
ஆனால், 6 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். முன்கூட்டியே முடித்தால் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா தொடர்ந்து கிடைக்கும். சிம் ஆக்டிவ் சலுகையும் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். மேலும், 1000 லம்ப்-சம் எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளை பெறலாம்.
ஜியோ ரூ 189 திட்டம் வருடாந்திர வேலிடிட்டி (Jio Rs 189 Plan Monthly Validity): இந்த ப்ரீபெய்ட் திட்டம் மதாந்திர வேலிடிட்டியில் கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களின் சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








