அம்பானிக்கு கும்பிடு.. இனி மாதம் ரூ.172 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. Jio-க்கு குஷி.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கட்டண உயர்வை அமல்படுத்திய பிறகு மாதத்துக்கு வெறும் ரூ.172 செலவில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 24 ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகையை கொடுக்கும் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. நீங்கள் ஜியோ கஸ்டமர்களாக இருந்தால், கீழ்காணும் மூன்று வேல்யூ திட்டங்களை (Value Plans) இனிமேல் விட்டுவைக்க மாட்டீர்கள். அவ்வளவு மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் சலுகைகள் மற்றும் விலையை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): ஜியோ வேல்யூ திட்டத்தில் முதலாவதாக இந்த திட்டம் கிடைக்கிறது. மதாந்திர வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் ஆகியவற்றுக்கு இந்த திட்டமே பக்காவான தேர்வாக இருக்கிறது. சொல்லப்போனால், மூன்று வேல்யூ திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) சலுகையை பெறலாம். மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. டேட்டாவை பார்க்கையில் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.
இந்த 2 ஜிபிக்கு பிறகு பேர் யூசேஜ் பாலிசியின் படி 64 கேபிபிஎஸ் வேக அன்லிமிடெட் டேட்டா சலுகை வருகிறது. எப்போதும் போல ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களின் சலுகை இந்த வேல்யூ திட்டத்திலும் கிடைக்கிறது. இதேபோல சலுகைகள் 84 நாட்களுக்கு வேண்டுமானால், பின்வரும் திட்டத்துக்கு செல்லுங்கள்.
ஜியோ ரூ 479 திட்ட விவரங்கள் (Jio Rs 479 Plan Details): இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 3 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதேபோல 6 ஜிபி மட்டுமே கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இதே சலுகைகள் வருடம் முழுவதும் வேண்டுமானால், ரூ 1899 மதிப்பிலான வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.
ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): இந்த ஜியோ வேல்யூ திட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு வேலிடிட்டி வருகிறது. அதாவது 336 நாட்களுக்கு சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை பெற்று கொள்ளலாம்.
3600 எஸ்எம்எஸ் மொத்தமாக கிடைக்கிறது. முந்தைய திட்டங்களை போலவே 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சலுகையும் இந்த வருடாந்திர திட்டத்துக்கு பொருந்தும். இந்த திட்டத்துக்கு மாதம் ரூ 172 மட்டுமே செலவாகிறது.
இப்போதைக்கு ஜியோவில் கிடைக்கும் மிகவும் மலிவான வாய்ஸ் கால்கள் சலுகை கொண்ட திட்டங்கள் இந்த மூன்று மட்டுமேயாகும். அதேபோல சிம் ஆக்டிவாக வைத்திருக்க மலிவாக திட்டம் வேண்டுமானாலும் இவை மட்டுமே நல்ல தேர்வாக இருக்கும். இந்த திட்டங்களை ஜியோ வேல்யூ பக்கத்துக்கு சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications