அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. Jio பயனர்களுக்கு 336 நாள் விருந்து.. ஒரே பிளான் பல நன்மைகள்.. எந்த திட்டம் தெரியும
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வாடிக்கையாளர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ (Jio) நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மிகமிக குறைந்த விலையில் 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் (Jio 336 days validity plan) வேலிடிட்டி நன்மையுடன் வழங்கியுது. இந்த புதிய ஜியோ 336 நாள் திட்டம் என்னென்ன நன்மைகளை அள்ளிக்கொடுக்கிறது என்று தெளிவாக பார்க்கலாம். பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளுடன் நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டங்களை தேடுபவர்கள் இந்த ஜியோ ப்ரீபெய்ட் பிளானை (Jio prepaid plans) மிஸ் செய்யவே கூடாது.
வீட்டில் வைஃபை கனெக்ஷன் (WiFi connection), அலுவலகத்தில் இன்டர்நெட் இணைப்பு (Internet connection) என்று நாம் அதிகமாக நேரம் செலவிடும் இடங்களில் எல்லாம் இன்டர்நெட் சேவை இப்போது அணுக கிடைத்துவிட்டது. இதனால் தானோ என்னவோ, மக்கள் இப்போது மொபைல் டேட்டா (mobile data) சேவையை குறைவாக பயன்படுத்துகிறார்கள். இதனால், மக்கள் இப்போது குறைந்த டேட்டாவுடன் அதிக நன்மையை கிடைக்கும் பிரத்தியேகமாக திட்டங்களை நோக்கி நகர துவங்கியுள்ளனர்.

அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. Jio பயனர்களுக்கு 336 நாள் விருந்து:
உதாரணமாக, அதிகம் தேவைப்படும் வாய்ஸ் கால் (Voice calls), எஸ்எம்எஸ் (SMS), OTT சந்தா மற்றும் இலவச நன்மைகள் (Free benefits) கிடைக்கும் திட்டங்களை மக்கள் விரும்பி ரீசார்ஜ் செய்ய துவங்கியுள்ளனர். இதை உணர்ந்த முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், தற்போது ஜியோ ரூ. 1899 திட்டம் (Jio Rs 1899 Plan) என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 336 நாள், அதாவது, 11 மாதம் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (11 month validity) கொண்டுள்ளது.
ஜியோ நிறுவனம், இந்த ஜியோ 1899 பிளான் (Jio 1899 Plan) மூலம் அதன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை விருந்தாக வழங்கி அசத்தியுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதில் லோக்கல் (Local), ரோமிங் (Roaming calls) மற்றும் எஸ்டிடி (STD) ஆகிய அணைத்தும் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளும் 336 நாட்களுக்கு அன்லிமிடெட் ஆக கிடைக்கிறது.
ஜியோ ரூ. 1899 திட்டம் (Jio Rs 1899 Plan):
இது தவிர இந்த திட்டத்துடன் உங்களுக்கு மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் ஜியோ வழங்குகிறது. இந்த ஜியோ ரூ. 1899 திட்டதுடன் உங்களுக்கு மொத்தமாகவே 24GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை (high speed data) பயன்படுத்த கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் இலவச நன்மைகளாக, ஜியோவின் மதிப்பான ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட்ஸ் (Jio Cloud) சேவைகள் கிடைக்கிறது.
OTT விருப்பங்களை விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ சினிமா ஒரு சிறந்த சந்தாவாக அமைகிறது. முக்கிய குறிப்பு, இந்த திட்டத்துடன் கிடைக்கும் ஜியோ சினிமா சந்தா பிரீமியம் சந்தா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஜியோ சினிமாவின் அடிப்படை சந்தாவை பயன்படுத்த அனுமதிக்கிறது. அடிப்படை சந்தாவிலேயே ஜியோ நிறுவனம் ஏராளமான திரைப்படங்கள், சீரிஸ், டாக்குமெண்ட்ரீஸ் என்று பல உள்ளடக்கங்களை நிரப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








