Home
News

Jio-வின் நண்பேன்டா திட்டங்கள்.. பாக்கெட் பிரெண்ட்லி - வருடம் முழுக்க பிரெண்ட்லி பிளான்ஸ்.. உடனே பாருங்க பாஸ்..

முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியாவில் 49 கோடி வாடிக்கையாளர்களை தக்க வைத்துள்ள இந்தியாவில் மிகப்பெரிய முன்னணி தொலைத்தொடர்பு (India's leading telecom company) நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ஜியோ (Jio) நிறுவனம் தற்போது அதன் பயனர்களை குஷி அடைய செய்யும் வகையில் மூன்று விதமான விலை பிரிவில் சிறந்த பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் மற்றும் இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளின் விபரங்களை பற்றி பார்க்கலாம்.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் நடைமுறைப்படுத்திய திடீர் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ஏற்றத்திற்கு பிறகு, 1 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் பலர், இப்போதும் பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் தொடர்ந்து மாறி வருகிறார்கள். இந்த போக்கை நிறுத்த, ஜியோ நிறுவனம் தற்போது மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்களை (budget friendly prepaid plans) அறிமுகம் செய்துள்ளது.

Jio-வின் நண்பேன்டா திட்டங்கள்.. பாக்கெட் - வருடம் முழுக்க பிரெண்ட்லி..

1. ஜியோ பாக்கெட் பிரெண்ட்லி திட்டம் (Jio Pocket Friendly Plan):
ஜியோ இந்த பிரிவின் கீழ் வழங்கியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான் ஜியோ ரூ. 189 திட்டம் (Jio Rs 189 Plan). இந்த திட்டம் 28 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 2GB டேட்டா நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் Jio Cinema, Jio Cloud, மற்றும் Jio TV போன்ற இலவச சந்தாக்கள் கிடைக்கிறது.

2. ஜியோ பட்ஜெட் பிரெண்ட்லி திட்டம் (Jio Budget Friendly Plan):
பட்ஜெட்ல பெஸ்ட் திட்டம் என்றால் அது இந்த ஜியோ ரூ. 479 திட்டம் (Jio Rs 479 Plan) தான் மக்களே. இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. இந்த 84 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 6GB டேட்டா (data) நன்மை மற்றும் 1000 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. கூடுதல் இலவசமாக Jio Cinema, Jio TV மற்றும் Jio Cloud சேவைகளை வழங்குகிறது.

3. ஜியோ வருடம் முழுக்க பிரெண்ட்லி திட்டம் (Jio Year Full Friendly Pack):
ஜியோவின் ரூ. 1899 திட்டம் (Jio Rs 1899 Plan) ஒரு சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. இது மலிவு விலையில் 336 நாடளுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த செல்லுபடியாகும் காலத்தில், இத்திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 24GB டாட்டா, 3600 SMS ஆகியவற்றை, Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud இலவச நன்மையுடன் வழங்குகிறது. இந்த திட்டம் குறைந்த விலையில் ஏறக்குறைய 1 வருடத்திற்கு செல்லுபடியாகிறது.

1 மாதம், 3 மாதம் மற்றும் 1 வருடம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, ஜியோ நிறுவனம் அதிக செலவில்லாமல் அதன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்கி. 1 மாத திட்டத்துடன் 2GB டேட்டா, 3 மாத திட்டத்துடன் 6GB டேட்டா மற்றும் 1 வருட திட்டத்துடன் 24GB டேட்டா நன்மையை வழங்கி அசத்தியுள்ளது.

அதேபோல், முறையே 300 SMS, 1000 SMS மற்றும் 3600 SMS-களை வழங்கியுள்ளது. இப்படி எல்லா பிரெண்ட்லி திட்டத்துடனும், Jio Cinema, Jio Cloud, மற்றும் Jio TV சந்தா போன்ற இலவச நன்மையையும் வழங்கி ஜியோ மக்களை கவர்ந்துள்ளது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரெண்ட்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்து மகிழுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Rs 479 Rs 1899 Plans Respectively With 28 84 336 Days Validity are Budget Friendly Recharges
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X