விட்டுக்கொடுத்த அம்பானி.. மறுபடியும் ரூ.189-க்கு இறக்கிட்டாரு.. வாய்ஸ் கால்கள்.. சிம் ஆக்டிவ்.. 2 ஜிபி டேட்டா!
இந்திய தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கொடுத்த உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட திட்டங்களை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கொடுத்தது. ஆனால், ஏற்கனவே அடிமட்ட விலைக்கு கிடைத்த வேல்யூ திட்டங்கள் (Value Plan) தூக்கப்பட்டன. இதனால் கஸ்டமர்கள் சிம் ஆக்டிவ் திட்டங்களுக்கு கூட அதிகமாக ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. இப்போது, அந்த நிலை மாறப்போகிறது.
வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்கள் வருவதற்கு முன்பு மூன்று வேல்யூ திட்டங்கள் கிடைத்தன. அதில் ஜியோ ரூ 189 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 189 Prepaid Plan) ஆரம்ப விலைக்கு கிடைத்தது. இந்த திட்டம் நீக்கப்பட்டதால், கஸ்டமர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதை புரிந்து கொண்ட ஜியோ மீண்டும் அந்த திட்டத்தை கொண்டுவந்துவிட்டது.

இப்போது, அதே வேல்யூ திட்டங்களின் கீழ் இந்த ஒரு திட்டம் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளில் ஜியோ நிறுவனம் ஏதாவது மாற்றம் செய்திருக்கும் என்று கஸ்டமர்களுக்கு தோன்றலாம். ஆனால், இப்போது அதன் முழு சலுகைகளை பார்க்க போகிறோம். அதன்பிறகு ஜியோ கஸ்டமர்களுக்கே அது புரிந்துவிடும்.
ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டம் முன்பு கொடுத்த அதே சலுகைகளை இப்போதும் கொடுக்கிறது. ஆகவே, மினிமம் செலவில் சிம் ஆக்டிவாக இருக்க வேண்டுமானால், இந்த திட்டத்தை தவிர வேறு ஆப்ஷன்களே கஸ்டமர்களுக்கு கிடையாது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
அதேபோல ஜியோ ஆப்களின் சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும். ஆகவே, மாதாந்திர வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை பெற்று கொள்ள முடியும். டேட்டாவை பொறுத்தவரை முன்பு கிடைத்ததை போலவே லம்ப்-சம் (lump-sum) சலுகையில் 2 ஜிபி கொடுக்கப்படுகிறது.
இருப்பினும், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்படி போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை கொடுத்து இருக்கிறது. எஸ்எம்எஸ் சலுகையிலும் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை. ஆகவே, வழக்கமாக கிடைத்த 300 எஸ்எம்எஸ்கள் 28 நாட்களுக்கும் பொருந்தும்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, ஜியோ ஆப்களை பார்ப்போம்.
இந்த வேல்யூ திட்டத்தில் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்கள் பயன்படுத்த கிடைக்கின்றன. இப்போதைக்கு இந்த திட்டம் மட்டுமே அடிமட்ட விலைக்கு தொடங்கும் திட்டமாக இருக்கிறது. இதற்கு அடுத்து அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ஒரு மலிவு விலை திட்டம் இருக்கிறது. ஆனால், வேலிடிட்டி குறைவாக கிடைக்கும்.
ஜியோ ரூ 198 ப்ரீபெய்ட் திட்டத்தில் 14 நாட்கள் மட்டுமே வேலிட்டி கிடைக்கும். இருப்பினும், இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதுபோக 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகையும் கூடுதலாக கிடைக்கிறது. இந்த வேல்யூ திட்டம் மற்றும் அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள் மட்டுமே ஆரம்ப விலைக்கு தொடங்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்களாகும்.


Click it and Unblock the Notifications








