Home
News

Jio ஒரே போடு.. ஒன்னு ரூ.189.. இல்ல, ரூ.198.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. இனிமே ரீசார்ஜ் பிச்சிக்கும்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலைக்கு கிடைக்கும் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா கொண்ட திட்டங்களை இப்போது பார்க்கப் போகிறோம். ஒரு திட்டம் லம்ப்-சம் டேட்டாவையும் மற்றொரு திட்டம் தினசரி டேட்டாவையும் கொடுக்கும். ஆனால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் பொதுவாக கிடைக்கிறது. இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மட்டுமே வெறும் ரூ.198 விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கொடுக்கும் திட்டம் தொடங்குகிறது. பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் இந்த விலைக்கு திட்டங்கள் கிடையாது. அதேபோல வேல்யூ திட்டங்களில் ரூ.189 விலைக்கு மாதாந்திர வேலிடிட்டி கொண்ட திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டங்களையே இப்போது பார்க்க இருக்கிறோம்.

Jio ஒரே போடு.. ஒன்னு ரூ.189.. இல்ல, ரூ.198.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

ஜியோ ரூ 189 திட்டம் (Jio Rs 189 Plan Details): ஜியோ ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு லம்ப்-சம் டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். உண்மையில், ஜியோவில் மலிவான விலைக்கு தொடங்கும் திட்டமாக இது இருக்கிறது. இதற்கு குறைவான விலைக்கு திட்டங்கள் கிடையாது.

ஆகவே, இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) வருகிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்களில் லம்ப்-சம் டேட்டா திட்டங்களில் போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆனால், இதில் கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகை போலவே எஸ்எம்எஸ்களும் லம்ப்-சம் சலுகையில் வருகிறது.

ஆகவே, மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிரெடிட் செய்யப்பட்டுவிடும். இதை தேவைக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு அடுத்து அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகைகள் வருகிறது. கூடுதல் சலுகைகளை பார்க்கையில், ஜியோ டிவி (Jio TV) சந்தா மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) சலுகை கிடைக்கிறது.

இந்த சலுகைகளுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்காவாக இருக்கும். இதேபோல ரூ.200-க்கும் கீழ் விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ.198 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் சலுகைகள் எப்படி?

ஜியோ ரூ 198 திட்ட விரங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, முந்தைய திட்டத்துக்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது. ஏனென்றால், வாய்ஸ் கால்களை போலவே அன்லிமிடெட் டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, இதை ரீசார்ஜ் செய்தால், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கு லிமிட் கிடையாது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.

Take a Poll

இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதற்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. அதேபோல எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையில் அல்லாமல், நாளொன்றுக்கு 100 கணக்கில் கிடைக்கிறது. அன்லிமிடெட வாய்ஸ் கால்கள், ஜியோ ஆப்களின் சலுகை இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. ஆனால், இதில் 14 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இதில் உங்களது தேவைக்கு ஏற்ப கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுஙகள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan With Unlimited Voice Calls 2GB Data 28 Days Validity Check Plan Under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X