Home
News

வேலை காட்டிய Airtel.. மினிமம் ரீசார்ஜ் விலை உயர்வு.. கேப்பில் கெடா வெட்டியா ஜியோ.. ரூ.189-க்கு முடிந்தது கதை!

ஏர்டெல் (Airtel) நிறுவனம் சத்தமே இல்லாமல், மினிமம் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்திவிட்டது. மறுபக்கம் கேப்பில் கெடா வெட்டியது போல ஜியோ (Jio) நிறுவனம், மலிவான விலைக்கு மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை கொடுக்கிறது. இனி ஏர்டெல்லில் மினிமம் ரீசார்ஜ் விலை எவ்வளவு இருக்கிறது, ஜியோவில் மினிமம் ரீசார்ஜ் எவ்வளவுக்கு கிடைக்கிறது, இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சிம் கார்டு ஆக்டிவாக இருக்கவும், மினிமம் விலைக்கு ரீசார்ஜ் செய்யவும் ரூ.189 திட்டம் களமிறக்கப்பட்டது. ஜியோவிலும் சரி, ஏர்டெல்லிலும் சரி, இந்த திட்டங்களே மலிவு விலை திட்டங்களாக இருந்தன. அதாவது, வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களிலேயே மலிவான விலைக்கு இவை கொடுக்கப்பட்டன.

வேலை காட்டிய Airtel.. மினிமம் ரீசார்ஜ் விலை உயர்வு.. கேப்பில் கெடா!

இப்போது, ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை நீக்கிவிட்டது. ஆகவே, அடுத்து இருக்கும் ரூ.199 விலை கொண்ட திட்டமே இப்போது மினிமம் ரீசார்ஜ் திட்டமாக மாறிவிட்டது. ஆனால், போட்டி நிறுவனமான ஜியோ அதனுடயை ரூ.189 திட்டத்தை அப்படியே வைத்திருக்கிறது. இந்த திட்டம் தொடர்ந்து கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இப்போதைக்கு இருக்கிறது.

ஏர்டெல்லில் முன்னதாக கிடைத்த ரூ.189 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைத்தது. 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டன. இந்த சலுகைகளுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இந்த திட்டம் இனிமேல் கிடைக்காது.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த மினிமம் ரீசார்ஜ் திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இந்த சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், ஏர்டெல்லில் மினிமம் ரீசார்ஜ் ரூ.199 விலைக்கு மட்டுமே ஆரம்ப ரீசார்ஜ் திட்டத்தை கொடுக்கிறது. ஆனால், ஜியோவில் ரூ.198 விலைக்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் குறைவான வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். இருப்பினும், ஏர்டெல்லைவிட ரூ.1 கம்மியாக கிடைக்கிறது.

ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): இந்த மலிவு விலை திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது.

உண்மையில் இந்தியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாகவும் இது இருக்கிறது. ஆனால், 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். எப்படி பார்த்தாலும், ஏர்டெல் நிறுவனம் மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை ரூ.199 விலைக்கு கொண்டு சென்றாலும், ஜியோ அதைவிட மலிவான விலைக்கு இரண்டு திட்டங்களை கொடுத்து, கேப்பில் கெடா வெட்டி இருக்கிறது. இந்த திட்டங்கள் தொடர்ந்து கிடைக்குமா என்பது தெரியாது.

ஏனென்றால், ஏர்டெல் நிறுவனம் ரூ.189 திட்டத்தை நீக்கியதை போலவே ஜியோவும் நீக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இப்போதும் ரீசார்ஜ் செய்ய கிடைப்பதால், தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.199 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி, 2 ஜிபி டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan With Unlimited Voice Calls 28 Days Validity Check Cheapest Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X