தூக்கி சாப்பிட்ட அம்பானி.. ரூ.189-க்கு வந்தது Jio.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. ஏர்டெல்லில் கஷ்டம்!
பிஎஸ்என்எல் நிறுவனமானது, இன்றளவும் 4ஜி சேவையை முழுமையாக வழங்காததால், டெலிகாம் போட்டியென்பது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய நிறுவனங்களுக்கு இடையே தொடர்ந்து வருகிறது. இந்த 2 நிறுவனங்களிலும் டெலிகாம் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகு ஏர்டெல் நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படியான ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது ஜியோ நிறுவனம். வெறும் ரூ.189 செலவில் அன்லிமிடெட் கால்கள், 2 ஜிபி டேட்டாவை கொடுத்து கஸ்டமர்களை தக்க வைத்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஜியோவில் மிகவும் மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொண்ட திட்டம் வேண்டுமானால், மூன்று திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இதில் முதலாவதாக கிடைக்கும் ஜியோ ரூ 189 திட்டமானது, போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியாவை தட்டித்தூக்கி இருக்கிறது.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இது மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் திட்டமாகும். இந்த மாதாந்திர திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.
இந்த மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் (Monthly Prepaid Plan) 2 ஜிபி டேட்டா சலுகை வருகிறது. இந்த 2 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இதுபோக ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
ஆகவே, ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) சலுகைகள் வருகிறது. மினிமம் ரீசார்ஜ் செய்து சிம் கார்டை தொடர்ந்து ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமானால், இந்த ஜியோ ரூ 189 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதற்கு அடுத்தபடியாக 2 தினசரி டேட்டா திட்டங்கள் இருக்கின்றன.
ஜியோ ரூ 209 திட்ட விவரங்கள் (Jio Rs 209 Plan Details): மிகவும் மலிவான விலையில் தினசரி டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், ஜியோ கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். மொத்தமாக 22 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்துக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் வருகிறது. அதேபோல ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை வருகிறது. இந்த திட்டத்துக்கு 22 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 249 திட்ட விவரங்கள் (Jio Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த 1 ஜிபிக்கு பிறகு முந்தைய திட்டங்களை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.
அதேபோல 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மினிமம் ரீசார்ஜ் செய்து சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமானால், மேற்கண்ட திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதே விலையில் ஏர்டெல்லில் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








