Home
News

இறங்கி அடிச்ச அம்பானி.. இனி ரூ.189 போதும்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

ஜியோவில் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிடும் கஸ்டமர்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லாமல், ஒரேவொரு ஆப்ஷனாக ஜியோ ரூ.189 திட்டம் இருக்கிறது. இது வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடையாது. டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களுடன் கிடைக்கும் திட்டமாக இருக்கிறது.

ஜியோ ரூ.189 திட்டத்தின் முழு விவரங்கள் (Jio Rs 189 Plan Full Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். சொல்லப்போனால், ஜியோவில் மலிவான விலைக்கு கிடைக்கும் 28 நாட்கள் திட்டமாக இது இருக்கிறது. இதற்கு கம்மியான விலைக்கு வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டம் கிடையாது. ஆகவே, 28 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls) கிடைக்கும்.

இறங்கி அடிச்ச அம்பானி.. இனி ரூ.189 போதும்.. 28 நாட்கள் வேலிடிட்டி!

இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களையும் (Roaming Calls) செய்து கொள்ளலாம். டேட்டா சலுகை தினசரிக்கு பயன்படுத்தும்படி கொடுக்கப்படவில்லை. 28 நாட்களுக்கும் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுக்கிறது. இருப்பினும், 2 ஜிபி முடிந்த பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கிடைக்கும்.

இந்த டேட்டாவை போலவே தினசரிக்கு பயன்படுத்தும்படி எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. 28 நாட்களுக்கும் மொத்தமாக 300 கணக்கில் கொடுக்கப்படும். ஆனால், இந்த லிமிட் முடிந்த பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டி இருக்கும். மற்ற சலுகைகளை பார்க்கையில், ஜியோ ஆப்கள் (Jio Apps) உள்ளன. இதில் ஜியோ டிவி (JioTV) ஆப் கிடைக்கிறது.

இதில் இலவசமாக கிடைக்கும் டிவி சேனல்கள் மற்றும் ஷோக்கள் மட்டுமே கிடைக்கும். பிரீமியம் சலுகைகள் கிடைக்காது. அதேபோல இதில் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைக்கும். ஆனால், கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படாது. மலிவான விலைக்கு 28 நாட்களுக்கு சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க விரும்பினால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வது எப்படி?
1.ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Jio.com பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
2. ஹேம் பேஜ்ஜில் இருக்கும் மொபைல் (Mobile) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. இதில் ப்ரீபெய்ட் (Prepaid) விருப்பம் தோன்றும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையுங்கள்.
4. இப்போது, திட்டங்களின் பட்டியல் காண்பிக்கப்படும். இதில் வேல்யூ (Value) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
5. இப்போது, மலிவு விலை பேக்குகள் (Affordable Packs) விருப்பம் இருக்கும். இதிலேயே ரூ.189 திட்டம் இருக்கிறது.

இதைவிட ரூ.10 அதிகமான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்படும். 4ஜி கஸ்டமர்களுக்கும் டேட்டா கிடைக்கும். 5ஜி கஸ்டமர்களுக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.198 திட்டத்தின் முழு விவரங்கள் (Jio Rs 198 Plan Full Details): இதில் 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 5ஜி கஸ்டமர்களாக இருந்தால், இது கணக்கில் எடுத்து கொள்ளப்படாமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.

இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகளையும் இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் கொடுக்கும். மலிவான விலைக்கு கிடைக்கும் 5ஜி திட்டமாக இது இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan With 2GB Data 64 Kbps Post Data Unlimited Voice Calls Check Affordable Pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X