பொழைச்சுட்டாரு அம்பானி.. கப்சிப்-ஆன கஸ்டமர்கள்.. இனி விலை கம்மி ஜியோ-தான்.. Jio-க்கு விருந்து.. என்ன சொல்லுற?
இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி? எது பெருசுனு அடிச்சு காமி என்பதுபோல இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) திட்டங்களின் சலுகைகளையும், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சலுகைகளையும் அலசி ஆராய்ந்து பார்க்க தொடங்கிவிட்டனர் டெலிகாம் கஸ்டமர்கள். இருந்தாலும்கூட, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை தறிகெட்டு ஓடுவதால், ஜியோ நிறுவனம் மலிவான விலைக்கு இறங்க வேண்டும் என்ற எண்ணம் அதன் கஸ்டமர்களிடயே எழுந்துவிட்டது. இந்த எண்ணத்தை தட்டித்தூக்கும்படி இந்த ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.
4ஜி சேவைகளை இலவசமாக கொடுத்து, பல டெலிகாம் நிறுவனங்களை இருந்த இடம்தெரியாமல் போக செய்த ஜியோ நிறுவனமே இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டு சற்று மிரண்டு போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், ஜியோவின் கட்டணம் உயர்த்தப்பட்டதில் இருந்து பிஎஸ்என்எல்லுக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதை கன்ட்ரோலில் எடுப்பது மட்டுமல்லாமல், 4ஜி வேகத்தில் இதைவிட மலிவான விலைக்கு யாரும் திட்டங்களை வைத்திருக்க கூடாது என்ற சபதம் போட்டதுபோல, வெறும் ரூ 189 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறங்கி விட்டிருக்கிறது ஜியோ நிறுவனம். சொல்லப்போனால், ஏர்டெல், வோடபோன் ஐடியாவில்கூட இந்த விலையில் திட்டம் கிடையாது.
இப்போதைய சூழ்நிலைக்கு ஜியோ கஸ்டமர்கள் எதிர்பார்க்கும்படி மிகவும் மலிவான விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த ரூ 198 திட்டம் பேக் செய்து கொடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்த்தால், ஜியோ கஸ்டமர்களுக்கே விவரம் புரிந்துவிடும்.
ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இதுவொரு மலிவான மாதாந்திர திட்டமாகும் (Chepest Monthly Plan). இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் முதல் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோவின் இதர சலுகைகள் கிடைக்கிறது.
ஆகவே, இந்த ரூ 189 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை பெற்று கொள்ளலாம். தினசரி எஸ்எம்எஸ் சலுகை கிடையாது. ஆனாலும், மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகையை ஜியோ கொடுத்திருக்கிறது.
இதேபோல மொத்தமாக 2 ஜிபி டேட்டா சலுகை வருகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா சலுகையாக இருந்தாலும், இந்த 2 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவையை வேலிடிட்டி முழுவதும் பெற்று கொள்ளலாம்.
இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகைகளும் கிடைக்கிறது. சொல்லப்போனால், சிம் ஆக்டிவுக்கு மிகவும் மலிவாக கிடைக்கும் திட்டம் இதுமட்டுமேயாகும்.
4ஜி வேகத்தில் இந்த விலையில் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல்லில் கூட திட்டங்கள் கிடையாது. இந்த விலை கிட்டத்தட்ட பிஎஸ்என்எல்லுக்கு நிகராக இருக்கிறது. அதேவேளையில், கூடுதல் வேகத்தோடு இருக்கிறது. அதேபோல எச்டி வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. இந்த திட்டமே இப்போதைக்கு மிகவும் மலிவான விலையில் 4ஜி டேட்டா கொண்ட திட்டமாகும்.
ஆகவே, இனிமேல் ஜியோ கஸ்டமர்கள் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இந்த திட்டத்தை தாராளமாக தேர்ந்தெடுங்கள். மற்ற நிறுவனங்களில் ரூ.200-க்கும் கீழ் திட்டங்கள் கிடையாது. பிஎஸ்என்எல்லில் இருந்தாலும், வேகம் மற்றும் நாடு முழுவதும் டவர் கனெக்டிவிட்டி கிடைக்காது. இதனாலேயே கஸ்டமர்களை கவர ஜியோ இதை வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








