Home
News

Jio SIM மினிமம் ரீசார்ஜ்.. ரூ.200-க்கு முடிச்ச அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 28 நாட்கள் வேலிடிட்டி!

தனியார் டெலிகாம் நிறுவனங்களானது, ரீசார்ஜ் திட்டங்களின் விலையில் மாற்றங்களை செய்து வருகின்றன. ஆகவே, மினிமம் ரீசார்ஜ் திட்டத்தின் (Minimum Recharge Plan) விலை அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளன. இந்த நேரத்தில் ஜியோ (Jio) நிறுவனத்தில் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தில் எந்த திட்டங்களின் விலையும் மாற்றப்படவில்லை. கடைசியாக உயர்த்தப்பட்ட விலையின்படி இப்போதும் கிடைக்கின்றன. ஆகவே, மினிமம் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.189ஆக மட்டுமே இருக்கிறது. இதற்கு அடுத்து ரூ.199 விலைக்கு திட்டம் கிடைக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.

Jio SIM மினிமம் ரீசார்ஜ்.. ரூ.200-க்கு முடிச்ச அம்பானி.. வாய்ஸ் கால்!

ஜியோ ரூ.189 மினிமம் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 189 Minimum Recharge Plan): அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்ட கிடைக்கும். மொத்தமாக 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

இந்த 2 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்னதாகவே பயன்படுத்தி முடித்துவிட்டால், பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இதேபோல ஏர்டெல்லில் கிடைக்கும் மினிமம் ரீசார்ஜ் திட்டத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மொத்தமாக 300 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது.

வாய்ஸ் கால்கள் வழக்கம்போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களாக (Roaming Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்த திட்டமாக ஜியோ ரூ.199 திட்டம் இருக்கிறது. ஆகவே, ரூ.200 விலைக்கும் கீழ் இந்த திட்டங்களை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் 18 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ.199 மினிமம் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 199 Minimum Recharge Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், இதில் தினசரி டேட்டாவை பெற்று கொள்ளலாம். டேட்டா அதிகமாக இருப்பதால், வேலிடிட்டி குறைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 18 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். 18 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 27 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். சொல்லப்போனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாகவும் இது இருக்கிறது.

இதில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது. இதுபோக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கும் திட்டமும் ரூ.200 விலைக்கும் கீழ் கிடைக்கிறது.

ஆனால், இதில் வேலிடிட்டி வெறும் 14 நாட்கள் மட்டுமே கிடைக்கும். அதாவது, ஜியோ ரூ.198 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை 14 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 14 நாட்களுக்கு மொத்தமாக 28 ஜிபி டேட்டாவை பெறலாம். 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டாவும் இதற்கு கிடைக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் கிடைக்கும். 28 நாட்களுடன் கிடைக்கும் ஜியோ ரூ.189 திட்டம் மட்டுமே மினிமம் ரீசார்ஜ் திட்டமாக இப்போதைக்கு உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan With 28 Days Validity 2GB Data Unlimited Voice Calls Check Jio Minimum Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X