Home
News

எங்கிட்ட வந்துதான் ஆகனும்.. ரூ.189-க்கு தூக்கி சாப்பிட்ட அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. விஐ எப்படி?

ஜியோ (Jio) நிறுவனத்தை போலவே வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் ரூ.189 விலைக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை கொடுக்கிறது. ஒரே விலைக்கு கிடைப்பதால், எதில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த திட்டங்களில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) என்று மூன்று சலுகைகளும் கிடைக்கின்றன.

ஜியோவில் ரூ.189 விலைக்கு கீழ் திட்டங்கள் கிடையாது. ஆனால், வோடபோன் ஐடியாவில் ரூ.189 விலைக்கும் மலிவாக திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் மிகவும் குறைவான சலுகைகளே கிடைக்கிறது. ஆகவே, இந்த ரூ.189 விலைக்கு கிடைக்கும் இந்த திட்டங்களை மட்டுமே ஒப்பீடு செய்ய முடிகிறது. முதலில் வோடபோன் ஐடியாவில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

எங்கிட்ட வந்துதான் ஆகனும்.. ரூ.189-க்கு தூக்கி சாப்பிட்ட அம்பானி!

வோடபோன் ஐடியா ரூ 189 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 189 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு 26 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களின் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல இந்த நாட்களுக்கு மொத்தமாக 1 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டாவுக்கு பிறகு வேறு சலுகைகள் கிடைக்காது. அதேபோல இந்த திட்டத்துக்கு எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. விஐ மூவிஸ் மற்றும் டிவி, நைட் டேட்டா போன்ற சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்கவில்லை. வாய்ஸ் கால்கள் மற்றும் 1 ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுத்து இருக்கிறது. ஆனால், ஜியோ நிறுவனம் தூக்கி சாப்பிடும்படி சலுகைகளை கொடுக்கிறது.

ஜியோ ரூ 189 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 189 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இது முந்தைய திட்டத்தில் கிடைத்ததை விட 2 நாட்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே, இதில் கிடைக்கும் சலுகைகளை கூடுதலாக 2 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல முந்தைய திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது.

இந்த திட்டத்துக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுத்து இருக்கிறது. ஆகவே, வேலிடிட்டிக்கு முன்னதாக டேட்டாவை பயன்படுத்தி முடித்தாலும், குறைவான வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

ஆனால், தினசரிக்கு கொடுக்கப்படாது. மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டுவிடும். இதை 28 நாட்களில் தேவைக்கு ஏற்ப கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த எஸ்எம்எஸ் சலுகையும் வோடபோன் ஐடியா திட்டத்தில் கிடைக்காது. இந்த சலுகைகள் எல்லாம் போல, ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் கூடுதல் சலுகைகள் இருக்கின்றன.

அதாவது, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் உள்ளன. ஆகவே, எப்படி பார்த்தாலும், ஜியோ நிறுவனத்தின் ரூ.189 திட்டமே அதிக சலுகைகளை கொடுக்கிறது. வாய்ஸ் கால்களில் 2 நிறுவனங்களும் எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால், வேலிடிட்டியில் வோடபோன் ஐடியா கம்மியாக இருப்பதால், ஜியோ முந்துகிறது.

ஏனென்றால், இது போன்ற மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய காரணமாக சிம் ஆக்டிவ் மற்றும் வேலிடிட்டி மட்டுமே முக்கியமாக இருக்கிறது. ஆகவே, ஜியோ நிறுவனம் ஒரே விலையில் 2 நாட்கள் அதிகமாக வேலிடிட்டி கொடுத்து கஸ்டமர்களை தக்க வைத்துள்ளது. வோடபோன் ஐடியா மலிவாக கொடுத்தாலும், கூடுதல் சலுகைகளை கொடுக்கவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan Vs Vodafone Idea Rs 189 Plan With Unlimited Voice Calls Which Plan is Better?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X