மினிமம் ரீசார்ஜ்.. Jio சிம் கார்டு ஆக்டிவுக்கு ரூ.189 எடுத்து வைங்க.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் மலிவான விலைக்கு அவர்களது சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க மினிமமாக எவ்வளவு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். ரூ.200-க்கும் கீழ் இரண்டு திட்டங்கள் இருந்தாலும், ரூ.189 திட்டத்தையே அதிக கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
எனது போனில் இரண்டு சிம் கார்டு இருக்கிறது, அதில் ஒரு சிம் கார்டை நான் பயன்படுத்த மாட்டேன், எப்போதாவது கால் செய்ய மட்டுமே பயன்படுத்துவேன், ஆனால் அதில் இன்கம்மிங் கால்கள் வரும், ஆகவே அதை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த திட்டம் மலிவாகவும் இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இதுதான் பெஸ்ட் ஆப்ஷனாகும்.

ஜியோ ரூ.189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சலுகையும் கிடைக்கும். ஆனால் எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா மிகவும் குறைவாகவே இருக்கும். ஏனென்றால், இது மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது.
சிம் ஆக்டிவ் வருவதால் இப்படி சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை பெற்ற பிறகு அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், இந்த டேட்டாவுக்கு பிறகு 64kbps போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்திற்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடையாது.
300 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்காது ஒட்டுமொத்தமாகவே கொடுக்கப்படுகிறது. ஆகவே இதற்கு மேல் சென்றால் கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டி இருக்கும். இந்த ப்ரீபெய்டு திட்டத்திற்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக முன்பே சொன்னதைப் போல ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகை வருகிறது.
ஆகவே, ஓரளவுக்கு கம்மியான டேட்டாவுடன் மலிவான விலைக்கு இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு வாய்ஸ் கால்கள் மட்டுமே போதும் என்றால், இதே போல மலிவான விலையில் ஒரு வாய்ஸ் கால் திட்டம் இருக்கிறது. ஆனால் அதில் ஒரு ஜிபி டேட்டா கூட கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.448 வாய்ஸ் ஒன்லி திட்ட விவரங்கள் (Jio Rs 448 Voice Only Plan Details): வாய்ஸ் கால்களை மட்டுமே கொண்ட திட்டங்களில் மலிவான விலைக்கு இந்த திட்டம் இருக்கிறது. இதில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்கள் முழுவதும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா கிடைக்காது. இருப்பினும் எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கும்.
84 நாட்களுக்கு மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தில் பார்த்த ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகை இதிலும் கிடைக்கும். இந்த திட்டத்தையும் சிம் ஆக்டிவ் திட்டமாக கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டங்களில் உங்களது பட்ஜெட் மட்டும் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








