Home
News

மறுபடியும் ரூ.300-க்கு வருது.. டேட்டா, வேலிடிட்டிக்கு வச்சாச்சு.. ஆனா, வாய்ஸ் கால்கள் மாறல.. Jio சிம் இருக்கா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.300 பட்ஜெட்டில் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், கட்டண உயர்வுக்கு முன்பு இருந்ததைப் போல பல்வேறு விலைகளில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதில் வாய்ஸ் கால்கள் மட்டும் மாறவில்லை. மற்றபடி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளில் மாற்றங்கள் இருக்கின்றன.

ஜியோ ரூ 189 திட்டம் (Jio Rs 189 Plan): இந்த பட்ஜெட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், அந்த 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரேமிங் கால்கள், 300 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் போதுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

மறுபடியும் ரூ.300-க்கு வருது.. டேட்டா, வேலிடிட்டிக்கு வச்சாச்சு.. ஆனா?

ஜியோ ரூ 198 திட்டம் (Jio Rs 198 Plan): இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் தினசரி டேட்டாவுடன் வருகிறது. ஆனால், வேலிடிட்டி 14 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, இந்த வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் வருகிறது.

ஜியோ ரூ 199 திட்டம் (Jio Rs 199 Plan): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடையாது. 18 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரேமிங் கால்களும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் செய்ய கிடைக்கின்றன. தினசரி டேட்டாவுடன் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டமாக இந்த ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 201 திட்டம் (Jio Rs 201 Plan): இந்த பட்ஜெட் திட்டத்தில் 22 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் 5ஜி டேட்டா கிடைக்காது, ஆனால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் ஜியோ கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 239 திட்டம் (Jio Rs 239 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 22 நாட்கள் வேலிடிட்டியில் முந்தைய திட்டத்தை போலவே சலுகைகள் வருகிறது. ஆனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

ஜியோ ரூ 249 திட்டம் (Jio Rs 249 Plan): இந்த திட்டத்தில்தான் தினசரி டேட்டா, எஸ்எம்எஸ்களுடன் 28 நாட்கள் வேலிடிட்டி தொடங்குகிறது. ஆகவே, இதில் 28 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் சலுகைகள் கிடைக்கிறது. ஜியோவில் ரூ.195 மதிப்புள்ள ஒரு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 299 திட்டம் (Jio Rs 299 Plan): இந்த திட்டத்தில் ஜியோ கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தை போலவே அதே 28 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan To Jio Rs 299 Plan With Unlimited Voice Calls Jio Recharge Plans Under Rs 300
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X