Home
News

பழையபடி கம்மி விலை.. மீண்டும் இறங்கியடிக்கும் Jio.. ரூ.189 பிளானை திருப்பி தரோம்.. ஓடியாங்க மக்களே..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் குறைந்த விலை கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Jio cheap tariff plan) அறிமுகம் செய்துள்ளது. சில காலத்திற்கு முன்பு ஜியோ (Jio) நிறுவனம் அதன் தளத்தில் இருந்து ஜியோ ரூ. 189 திட்டத்தை (Jio Rs 189 Plan) நீக்கம் செய்தது. மக்களின் தேவை அறிந்து, ஜியோ நிறுவனம் இப்போது மீண்டும் மலிவு விலை விருப்பமான ரூ. 189 திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் (prepaid plans) மற்றும் போஸ்ட்பைட் திட்டங்களின் (postpaid plans) விலையை அதிகரித்தது. இதனால், பல லட்சம் வாடிக்கையாளர்கள் மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் பக்கம் மாற துவங்கியுள்ளது.

பழையபடி கம்மி விலை.. மீண்டும் இறங்கியடிக்கும் Jio.. ரூ.189 பிளான்..

பழையபடி கம்மி விலை.. Jio ரூ.189 பிளானை திருப்பி தரோம்.. மீண்டும் இறங்கியடிக்கும் அம்பானி:

தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புதிதாக 55 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க்கின் கீழ் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஜியோ நிறுவனம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதை சரி செய்யும் விதமாக, ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் ரீசார்ஜ் பட்டியலில் இருந்து நீக்கம் செய்த Jio Rs 189 Plan திட்டத்தை இப்போது மீண்டும் வழங்க துவங்கியுள்ளது.

ஜியோ (Jio) நிறுவனம் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்திய, புதிய விலை திருத்தங்களுக்கு முன்னால், இந்த திட்டத்தை ஜியோ நிறுவனம் ஜியோ ரூ. 155 திட்டம் என்ற பெயருடன் வெறும் 155 ரூபாய் விலையில் (Jio Rs 155 Plan) வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விலை ஏற்றத்திற்கு பிறகு, ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை ஜியோ ரூ. 189 திட்டம் என்று வழங்க துவங்கியுள்ளது.

ஜியோ ரூ. 189 திட்டம் (Jio Rs 189 Plan):

இந்த ஜியோ ரூ. 189 திட்டம் (Jio Rs 189 Plan) அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (28 days validity plan) உடன் வருகிறது. இந்த திட்டம் 2GB ஹை-ஸ்பீட் டேட்டா (2GB high speed data) நன்மையை வழங்குகிறது.

இந்த டேட்டா நன்மை தினசரி வரம்பில்லாமல் மொத்த டேட்டா நன்மையாக வழங்கப்படுகிறது. இந்த 2GB டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64Kbps வேகமாக குறைக்கப்படும் (data speed) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையே வழங்குகிறது. இந்த திட்டம் அதிகம் டேட்டா நன்மை தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்கானது.

யாருக்கெல்லாம் இந்த பிளான் பெஸ்ட்?

ஜியோ இந்த திட்டத்தை ரூ. 155 விலையில் வழங்கிய போது, இத்துடன் ஜியோவின் இலவச நன்மைகளான ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சேவைகளுக்கான அணுகலை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. Jio 189 Plan திட்டமும் இந்த இலவசங்களை வழங்குகிறது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் போதுமான டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். உங்கள் வீட்டில் வைஃபை (Wi-Fi) இணைப்பு இருக்கிறதென்றால் கூட, இந்த திட்டம் சிறந்த தேர்வாக அமையும். மலிவு விலையில், பாக்கெட் பிரெண்ட்லி கட்டணத்துடன் ஒரு சிறப்பான திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நிச்சயம் இந்த ஜியோ 189 திட்டம் (Jio 189 Plan) சிறந்த தேர்வாக அமையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan Reappears On Jio Prepaid Plan Site Check The New Benefits Of The Plan Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X