Home
News

மினிமம் ரீசார்ஜ்.. ரூ.189-க்குதான் சிம் ஆக்டிவ்.. Jio-க்கு வேற இல்ல.. இனிமே வேலிடிட்டி இதுதான்.. வாய்ஸ் கால்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்கள் அதை ஆக்டிவாக வைத்திருக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) தொடங்கி டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சந்தாவையும் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி எப்படி? சிம் ஆக்டிவாக இருக்க இதை ரீசார்ஜ் செய்ய வேண்டுமா?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதில் இருந்து, எந்த திட்டத்தில் மலிவான விலைக்கு அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்த்துவிட்ட பிறகே ரீசார்ஜ் செய்வது அதிகரித்து இருக்கிறது. சொல்லப்போனால், சிம் ஆக்டிவ் திட்டங்களையே (SIM Active Plans) அதிகளவில் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

மினிமம் ரீசார்ஜ்.. ரூ.189-க்குதான் சிம் ஆக்டிவ்..  Jio-க்கு வேற இல்ல!

ஏனென்றால், இந்த திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். அதே நேரத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் தேவைக்கு ஏற்ப மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால், விலையும் அடிமட்டத்தில் இருக்கிறது. இப்படி இருக்கும் திட்டங்களில் ஜியோ ரூ.189 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது.

ஜியோ ரூ 189 சிம் ஆக்டிவ் திட்டம் (Jio Rs 189 SIM Active Plan): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை குறைவாகவே கிடைக்கும். இருப்பினும், வாய்ஸ் கால்களுக்கு எந்தவித குறையும் இருக்காது. அதேபோல வேலிடிட்டியும் விலைவிட கூடுதலாகவே கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

இந்த 2 ஜிபி டேட்டா லம்ப்-சம் சலுகையாக கிடைக்கிறது. ஆகவே, தினசரி லிமிட் கிடையாது. அதே நேரத்தில் 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும். 2 ஜிபிக்கு மேல் டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களுக்கு செல்லலாம். அதேபோல 300 எஸ்எம்எஸ்களை மொத்தமாக பெறலாம்.

இந்த சலுகைகள் மட்டுமே குறைவாக கிடைக்கின்றன. ஆனால், வாய்ஸ் கால்களுக்கு எந்த குறையும் இல்லை. அதாவது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக கூடுதலாக ஜியோ ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

ஜியோ கஸ்டமர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜியோவில் இப்போதைக்கு மலிவான விலையில் சிம் ஆக்டிவ் வேண்டுமானால், இந்த திட்டத்தை தவிர வேறு ஆப்ஷன் கிடையாது.

இதற்கு அடுத்ததாக மலிவு விலை சிம் ஆக்டிவ் திட்டம் வேண்டுமானால், தினசரி டேட்டாவுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் குறைவான வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. இந்த விலை டேட்டாவுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 209 சிம் ஆக்டிவ் திட்டம் (Jio Rs 209 SIM Active Plan): இந்த திட்டத்தில் 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 1 ஜிபி டேட்டா வீதம் 22 நாட்களுக்கு 22 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். மேலும், ஜியோ ஆப்களின் சலுகைகள் இதிலும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan Offers Unlimited Calls 2GB Data 300 SMS 28 Days Validity Check SIM Active Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X