Home
News

Jio SIM வைத்து இருப்பவர்களுக்கு பழையபடி ரூ.200-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பழையபடி ரூ.200 விலைக்கும் கீழ் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், மூன்று திட்டங்கள் ஆப்ஷனில் இருக்கின்றன. இதிலொரு திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. அதேபோல லம்ப்-சம் டேட்டாவும் கிடைக்கும். ஆனால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகின்றன.

ஜியோ ரூ.189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): ஜியோ நிறுவனத்தின் ஆரம்ப விலை ப்ரீபெய்ட் திட்டமாக இது இருக்கிறது. அதாவது, இதற்கு கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் ரீசார்ஜ் திட்டம் கிடைக்காது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா தினசரிக்கு கிடைக்காது.

Jio SIM வைத்து இருப்பவர்களுக்கு பழையபடி ரூ.200-க்கு ரீசார்ஜ்!

மொத்தமாக 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். அதாவது, இந்த ஜியோ ரூ.189 திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். எஸ்எம்எஸ்களும் மொத்தமாக கிடைக்கின்றன.

28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஜியோ ரூ.189 திட்டத்தில் வாய்ஸ் கால்கள் வழக்கம்போலவே கொடுக்கப்படுக்கின்றன. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. தினசரி டேட்டாவுக்கு அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.

ஜியோ ரூ.199 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): முந்தைய திட்டத்தில் வேலிடிட்டி முழுவதும் மொத்தமாக டேட்டா கிடைத்தது. அதிலும் மிகவும் கம்மியாக கிடைத்தது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இருப்பினும், 18 நாட்கள் மட்டுமே இந்த ஜியோ ரூ.199 திட்டத்துக்கு வேலிடிட்டி கிடைக்கும்.

ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 18 நாட்களுக்கு 27 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். முந்தைய திட்டத்தை போலல்லாமல், இதில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களையும் அணுகலாம். இதே ரூ.200 விலைக்கும் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற விரும்பினால், கண்ணை மூடிக்கொண்டு ஜியோ ரூ.198 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும். ஆனால், வேலிடிட்டி குறைவாக இருக்கும்.

ஜியோ ரூ.198 திட்ட விவரங்கள் (Jio Rs 199 Plan Details): இந்த திட்டத்தில் வெறும் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, 4ஜி வேகத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதுவே 5ஜி கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.

இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் கொடுக்கப்படும். இதில் டேட்டா சலுகைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan Jio Rs 198 Plan And Jio Rs 199 Plan Unlimited Voice Check Under Rs 200 Plan Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X