Home
News

அதான் சார் அம்பானி.. இனிமே 84 நாட்களுக்கு குஷி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தானு எல்லாமே!

எவ்வளவு பயன்படுத்தினாலும் டேட்டாவே குறைய கூடாது என்று கேட்கும் ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு முத்தான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plans) இருக்கின்றன. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரையில் கொடுக்கின்றன. இதுபோக வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகையும் இதில் கிடைக்கின்றன. இந்த மூன்று திட்டங்களில் உங்களது பட்ஜெட்டில் எந்த திட்டம் இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்கு முன் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ 449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 Prepaid Plan): இந்த ஜியோ திட்டமானது, ஆரம்ப விலையில் 3 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது. அதாவது, 3 ஜிபி டேட்டா திட்டம் வேண்டுமானால், கம்மி விலையே ரூ 499ஆக இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் 3 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கொடுக்கப்படும்.

அதான் சார் அம்பானி.. இனிமே 84 நாட்களுக்கு குஷி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஆகவே, அதிகப்படியான டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகள் போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை வருகிறது.

இந்த சலுகைகள் மட்டுமே ஐபிஎல் 2025 போட்டிகளுக்கு முன்பாக கிடைத்து வந்தது. ஆனால், இப்போது ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதுவும் 90 நாட்களுக்கு சந்தா கிடைக்கிறது. ஆகவே, திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்தில் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதை செய்தால் மட்டுமே மீதமுள்ள ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெற்று கொள்ள முடியும். இதேபோல அடுத்து வரும் 3 ஜிபி டேட்டா திட்டங்களிலும் ஜியோஹாஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆனால், இந்த சலுகையை ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் மட்டுமே பெற்று கொள்ள முடியும். ஆகவே, அதற்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் சலுகைகள் மட்டுமே கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.

ஜியோ ரூ 1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 Prepaid Plan): இந்த ஜியோ திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையுடன் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ டிவி சந்தா கிடைக்கிறது. அதேபோல ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவும் வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுக்கிறது. அடுத்த திட்டம் நெட்பிளிக்ஸ் சந்தாவை கொடுக்கிறது.

ஜியோ ரூ 1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 Prepaid Plan): இந்த ஜியோ திட்டத்தில் புதிதாக கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், ஏற்கனவே திட்டத்தில் இருக்கும்படி நெட்பிளிக்ஸ் சந்தாவும் கிடைக்கிறது. இந்த 2 ஓடிடி சந்தாவையும் திட்டத்தின் வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவும் இதில் கிடைக்கிறது.

இந்த 3 ஜிபி டேட்டா திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை பொருந்தும். அதேபோல 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களையும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் செய்து கொள்ளலாம். எப்படி பார்த்தாலும், ஓடிடி சலுகைகளுக்கு ஏற்ப மூன்று திட்டங்களிலும் அதிகப்படியான டேட்டா கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 1799 Plan With 3GB Data 84 Days Validity Unlimited Voice Calls Check 3GB Daily Data Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X