Home
News

கும்பிடு போடும் Jio கஸ்டமர்ஸ்.. ஒரு நாளுக்கு 3GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஓடிடி சந்தா.. எந்த திட்டம்?

ஒரு நாளுக்கு 3 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற அதிகபட்ச சலுகைகளை ஜியோ (Jio) நிறுவனம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) கொடுத்து இருக்கிறது. இதுவொரு பிரீமியம் சலுகைகளை கொண்ட திட்டமாக இருப்பதால், அதற்கு ஏற்ப விலையும் இருக்கிறது. டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை விரும்பும் கஸ்டமர்கள் கும்பிடு போடும்படி சலுகைகள் இதில் இருக்கின்றன.

மூன்று மாதங்களுக்கு அதிகபட்ச டேட்டா சலுகைகள் மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்கள் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லாமல், ஜியோ ரூ 1799 திட்டம் (Jio Rs 1799 Plan) கிடைக்கிறது. இது மூன்று மாதங்களுக்கு அதிக விலை போல தோன்றலாம். ஆனால், அதன் சலுகைகள் விலைக்கு ஏற்ப வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

கும்பிடு போடும் Jio கஸ்டமர்ஸ்.. ஒரு நாளுக்கு 3GB டேட்டா.. அன்லிமிடெட்!

ஜியோ ரூ 1799 திட்ட விவரங்கள் (Jio Rs 1799 Plan Details): அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை இல்லாமலேயே இந்த திட்டத்துக்கு அதிகப்படியான டேட்டா சலுகை கிடைக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை (3GB Data) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இதுவே தினசரிக்கு தாராளமாக இருக்கும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைப்பதால், 4ஜி மற்றும் 5ஜி என்று எந்த கனெக்டிவிட்டியிலும் உங்களுக்கு டேட்டா சலுகை அதிகமாகவே கிடைக்கும். இந்த அதிகப்படியான டேட்டாவுக்கு ஏற்ப பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதலில் நெட்பிளிக்ஸ் உள்ளது.

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தா மட்டுமே ஆரம்பத்தில் இருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், ஜியோ சினிமா மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடிகள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு இதில் கூடுதலாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கொடுக்கப்படுகிறது.

இந்த ஓடிடி ஆப்களின் சந்தாவையும் 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி மற்றும் டேட்டா சலுகைகளே கஸ்டமர்களை தட்டித்தூக்குகின்றன. மற்ற சலுகைகளும் அப்படியே கிடைக்கிறது. அதாவது, வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) & 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது.

அதேபோல ஜியோ ஏஐ கிளவுட் சலுகையின் கீழ் 50 ஜிபிக்கான கிளவுட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். சொல்லப்போனால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் அதிகப்பட்ச சலுகையுடன் கிடைக்கும் திட்டம் இது மட்டுமேயாகும். இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதேபோல 84 நாட்கள் நாட்கள் வேலிடிட்டியில் மற்றொரு 3 ஜிபி திட்டம் உள்ளது.

ஆனால், அதில் பிரீமியம் ஓடிடி சலுகைகள் கிடைக்காது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்படும். அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ ஏஐ கிளவுட் ஆகிய சலுகைகளை வாங்கி கொள்ளலாம்.

ஜியோஹாட்ஸ்டார் சந்தா இதற்கும் கிடைக்கிறது. ஆனால், இது திட்டத்தின் சலுகை கிடையாது. கூடுதல் ஆஃபராக மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதை ஒரு முறை மட்டுமே பெற்று கொள்ள முடியும். லிமிடெட் பிரீயட் ஆஃபராக இருப்பதால் முந்தைய திட்டத்திலேயே அதிகப்பட்ச சலுகைகள் கிடைப்பது தெரிகிறது. இதற்கும் 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1799 Plan With 3GB Daily Data Unlimited Voice Netflix JioHotstar Apps 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X