அடிச்சாரு பாரு அம்பானி.. இனிமே டெய்லி 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா.. 3 ரீசார்ஜ் திட்டம்!
ஜியோ (Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் (Daily 3GB Data) கிடைக்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா தொடங்கி பிரீமியம் ஓடிடி சந்தா வரையில் சலுகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் சலுகைகளை கொடுத்துள்ளோம். இதில் உங்களுக்கான ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
ஜியோ ரூ 449 திட்டம் முழு விவரங்கள் (Jio Rs 449 Plan Full Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் 3 ஜிபி டேட்டா திட்டமாக இருக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வேண்டுமானால், இந்த திட்டத்தில் இருந்தே ஆப்ஷன்கள் தொடங்குகின்றன. ஆகவே, இதில் 28 நாட்களுக்கு மட்டுமே கஸ்டமர்கள் வேலிடிட்டி பெற்று கொள்ள முடியும்.

ஆனால், இந்த நாட்களில் குறையில்லாத டேட்டா சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதுபோக 3 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
மற்ற சலுகைகளை பார்க்கையில், இந்த திட்டத்துக்கு ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் (Jio Unlimited Offer) சலுகை வருகிறது. இதன் கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவானது, 3 மாதங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வருவதால், 90 நாட்கள் சந்தாவை பெற அடுத்த ரீசார்ஜ் உடனடியாக செய்ய வேண்டும்.
மேலும், 50 ஜிபிக்கான ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையும் இந்த திட்டத்துக்கு வருகிறது. இறுதியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த 3 ஜிபி டேட்டா திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இதற்கு அடுத்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியில் இருந்து தொடங்குகிறது. இதன் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ 1199 திட்டம் முழு விவரங்கள் (Jio Rs 1199 Plan Full Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் பார்த்த அனைத்து சலுகைகளும் பொருந்தும். ஆனால், வேலிடிட்டி மட்டும் 84 நாட்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த 84 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
அதேபோல ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மூன்று மாதங்களுக்கும், ஜியோ ஏஐ கிளவுட்டில் 50 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். இறுதியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இதற்கு அடுத்த திட்டம் கூடுதல் ஓடிடி சந்தாவுடன் கிடைக்கிறது.
ஜியோ ரூ 1799 திட்டம் முழு விவரங்கள் (Jio Rs 1799 Plan Full Details): ஜியோவில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டத்தில் அதிக விலைக்கு இந்த திட்டம் வருகிறது. இதிலும் 84 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.
இது முந்தைய திட்டத்தை போலவே இருந்தாலும், இதில் நெட்பிளிக்ஸ பேசிக் (Netflix Basic) சந்தாவானது கிடைக்கிறது. மேலும், முந்தைய திட்டத்தில் பார்த்த ஜியோ அன்லிமிடெட் ஆஃபரும் வருவதால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் 3 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ப திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








