Jio-வுக்கு கும்பிடு.. காஸ்ட்லீ OTT சந்தா இனி இலவசம்.. அசத்திய Jio.. குஷியில் Jio பயனர்கள்.. எந்த விலை திட்டம்?
ஜியோ (Jio) நிறுவனம் இந்தியாவின் காஸ்ட்லீ ஓடிடி (OTT) சந்தா நன்மையான நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தாவை இப்போது இலவசமாக (Free OTT benefit) அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க துவங்கியுள்ளது. ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களுடன் (Jio prepaid plans) நெட்பிளிக்ஸ் சந்தா நன்மையை இலவசமாக வழங்க துவங்கியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் விலை என்ன? மற்றும் இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் தற்போது இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களின் மனதை குளிர வைக்கும் விதமான நன்மைகள் அடங்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் பல புதிய திட்டங்களை, பலவகையான நன்மைகளுடனும், கூடுதல் இலவச நன்மைகளுடன் (Extra free benefits) வழங்கி மக்களை கவர்ந்து வருகிறது.

இந்தியாவின் காஸ்ட்லீ OTT சந்தாவை இலவசமாக வழங்கி அசத்திய Jio:
அந்த வகையில் தற்போது, இந்தியாவின் மிகவும் காஸ்ட்லீ ஆன ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ தற்போது இலவசமாக வழங்க துவங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Videos), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற OTT தளங்களின் சந்தாவை தான் பெரும்பாலானோர் வாங்கி பயன்படுத்திகிறார்கள். ஆனால், நெட்பிளிக்ஸ் (Netflix) OTT சேவையை குறைந்தளவு மக்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
காரணம், இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த OTT சேவை என்றால், அது நெட்பிளிக்ஸ் மட்டும் தான் என்று கூறும் அளவிற்கு இதன் கட்டணங்கள் வெகு அதிகமாக இருக்கிறது. இத்தகைய காஸ்ட்லீ OTT உள்ளடக்கத்தை ஜியோ நிறுவனம் தற்போது அதன் ஜியோ ரூ. 1799 திட்டம் (Jio Rs 1799 plan) மற்றும் ஜியோ ரூ. 1299 திட்டம் (Jio Rs 1299 plan) ஆகிய இரண்டு திட்டங்களுடன் வழங்குகிறது.
ஜியோ ரூ. 1799 திட்டம் (Jio Rs 1799 plan):
இந்த திட்டம் 84 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தாவை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கி அசத்துகிறது. இந்த திட்டம் ஏறக்குறைய 3 மாதங்களுக்கு Netflix சந்தாவை வழங்குகிறது. இத்திட்டம், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் தினசரி 3GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இது மொத்தமாக 252GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களாகும்.
ஜியோ ரூ. 1299 திட்டம் (Jio Rs 1299 plan):
மேற்கூறிய ஜியோ ரூ. 1799 திட்டத்தை பட்ஜெட் பிரெண்டிலி திட்டமாக வழங்க முடிவு செய்து, ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் இந்த ஜியோ 1299 பிளான் (Jio 1299 Plan). இந்த திட்டமும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 84 நாட்களுக்கு இலவச Netflix சந்தாவை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களும் கூடுதல் நன்மையாக ஜியோ வழங்கும் ஜியோ டிவி நன்மை, ஜியோ சினிமா நன்மை மற்றும் ஜியோ கிளவுட் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. பிரீமியம் OTT உள்ளடக்கத்தை அனுபவிக்க துடிக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் ஒரு தலைசிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








