Home
News

புது மினிமம் ரீசார்ஜ்.. இனிமே ரூ.149 இல்ல.. ரூ.199 கொடுங்க.. சிம் ஆக்டிவ் திட்டம் இதுதான்.. 2 திட்டம் நீக்கம்!

ஜியோ சிம் கார்டை ஆக்டிவாக (Jio SIM Card Active) வைத்திருக்க ரூ.149 மதிப்பில் கிடைத்த வந்த மினிமம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Minimum Prepaid Recharge Plan) சத்தமே இல்லாமல் ஜியோ நிறுவனம் தூக்கிவிட்டது. இதற்கு அடுத்தப்படியாக இருந்த ரூ.179 திட்டமும் அதேபோல நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே, ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு இனிமேல் மினிமம் ரீசார்ஜ் திட்டமாக, விலையில் மாற்றம் செய்யப்பட்ட புதிய திட்டமே கிடைக்கப்போகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 179 திட்ட விவரங்கள் (Jio Rs 179 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் வழக்கமாக கிடைக்கும் ஜியோ ஆப்களின் சலுகைகள் வருகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இனிமேல் மினிமம் வேலிடிட்டி 28 நாட்களாக மாறுகிறது.

கதை முடிந்தது.. மினிமம் ரூ.149 இல்ல.. சிம் ஆக்டிவுக்கு ரூ.199 கொடுங்க!

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த 28 நாட்கள் திட்டத்தில் செய்து கொள்ளலாம். டேட்டா சலுகையை பார்க்கையில், தினசரி ஒதுக்கீடு கிடையாது. மொத்தமாக 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது.

ஆகவே, வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும், 2 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தலாம். அதிவேக டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இந்த மினிமம் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடையாது.

எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறது. ஆகவே, 28 நாட்களில் 300 எஸ்எம்எஸ்களை ஜியோ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இதுபோக ஜியோ திட்டங்களில் கிடைக்கும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சலுகைகள் கிடைக்கிறது. இதில் ஜியோசினிமாவுக்கு பிரீமியம் சலுகை கொடுக்கப்படாது.

கதை முடிந்தது.. மினிமம் ரூ.149 இல்ல.. சிம் ஆக்டிவுக்கு ரூ.199 கொடுங்க!

இந்த ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே ஜியோ சிம் கார்டை தொடர்ந்து ஆக்டிவாக வைத்திருக்க குறைந்தபட்ச விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் முன்னதாக ரூ.159 பட்ஜெட்டில் கிடைத்தது. ஜியோ திட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு பிறகு இதன் விலை ரூ.199ஆக இருக்கிறது. இது ஏர்டெல்லின் ரூ.199 திட்டத்தைவிட ரூ.10 மட்டுமே குறைவாகும்.

ஜியோவில் இதற்கு அடுத்தபடியாக தினசரி டேட்டா கொண்ட திட்டங்களில் மிகவும் மலிவான விலைக்கு ரூ.209 திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடையாது. இருப்பினும், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 1 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

இதுபோக முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை பெற முடிகிறது. ஆனால், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் அனுப்பிக் கொள்ளலாம். மேலும், ஜியோசினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சாந்தா கிடைக்கிறது. 22 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 179 Plan With Unlimited Calls, 28 Days Validity, 2GB Data Check New Minimum Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X