Home
News

Jio அதிரடி.. ரூ.200 விலைக்குள் 12 OTT சேனல் நன்மை.. BSNL பக்கம் மாறாதீங்க.. அள்ளி அள்ளி தரும் அம்பானி..

இந்தியாவில் உள்ள கோடிக் கணக்கான ஜியோ (Jio) பயனர்களுக்கு அட்டகாசமான ஒரு சிறப்பு திட்டத்தை முகேஷ் அம்மணிகி சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இப்போது, நிறுவனம் சமீபத்தில் அறிவித்த விலை அதிகரிப்பை தொடர்ந்து, பல லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறிவருகின்றனர். இதுவரை ஜியோ நிறுவனம் அன்லிமிடெட் அழைப்பு நன்மையை மட்டும் இலவசமாக வழங்கி வந்தது. இதை தடுக்கும் விதமாக, ஜியோ நிறுவனம் இப்போது ஒரு படி மேலே சென்று, ரூ. 200 விலைக்குள் 12 வகையான ஓடிடி (OTT) சேனலுக்கான அணுகலை வழங்கியுள்ளது.

அதிகரித்து வரும் மொபைல் கட்டணங்களுக்கு மத்தியில், ஜியோ நிறுவனம் மீண்டும் அதன் பயனர்களை கவரும் நோக்கில் புதிதாக ஜியோ ரூ.175 விலை கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலை அதிகரிப்பால், சமீபகாலமாக பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் (BSNL) வெட்வொர்க்கிற்கு மாறியுள்ளனர். இந்த புதிய திட்டம் கூடுதல் நன்மைகளுடன் மலிவு விருப்பத்தை வழங்குவதன் மூலம் ஜியோவின் பயனர் தளத்தைத் தக்கவைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jio அதிரடி.. ரூ.200 விலைக்குள் 12 OTT சேனல் நன்மை.. BSNL மாறாதீங்க..

ஜியோ ரூ.175 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 175 Prepaid Recharge Plan):

புதிய ஜியோ ரூ.175 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், ஜியோவின் பொழுதுபோக்கு வகையின் கீழ் வருகிறது. அதாவது ஜியோவின் என்டேர்டைன்மெண்ட் பிரிவின் கீழ் (Jio Entertainment Plan) வருகிறது. ஜியோவின் இணையதளம் அல்லது MyJio ஆப் மூலம் இவை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த திட்டம் 28 நாள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. தினசரி வரம்பு ஏதுமின்றி பயனர்கள் மொத்தம் 10ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுகிறார்கள்.

இருப்பினும், இது அழைப்பு நன்மையுடன் வராது என்பது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள உங்கள் திட்டங்களை நிறைவு செய்யும் வகையில் இது உள்ளது. ஜியோ ரூ.175 திட்டத்திற்கு கூடுதலாக, ஜியோ ரூ.329, ரூ.1029 மற்றும் ரூ.1049 ஆகிய மூன்று பொழுதுபோக்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, OTT ஆப் சந்தாக்கள் மற்றும் தினசரி டேட்டா கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொழுதுபோக்குப் பிரிவிலும் அவை பட்டியலிடப்பட்டுள்ளன. ஜியோ ரூ.175 திட்டத்தில் Sony LIV, Zee5, Jio Cinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, DocuBay, Epic On மற்றும் Hoichoi போன்ற பல OTT பயன்பாடுகளுக்கான இலவச சந்தாக்கள் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த சந்தாக்கள் டேட்டா பலன்களின் அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஜியோ ஃப்ரீடம் ரூ. 355 திட்டம் (Jio Rs 355 Freedom Plan):

இத்துடன் ஜியோ நிறுவனம் மற்றொரு தந்திரமான திட்டத்தை வழங்கி வருகிறது. அது தான், ஜியோ ஃப்ரீடம் ரூ. 355 திட்டம் (Jio Rs 355 Freedom Plan), இது முழு 30 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் முழு காலத்திற்கும் வரம்பற்ற இலவச அழைப்புகளை உள்ளடக்கியது. கூடுதலாக, சந்தாதாரர்கள் தினசரி வரம்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் மொத்தம் 25 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதன் பொருள் பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப 25ஜிபி டேட்டாவை மாதம் முழுவதும் பயன்படுத்தலாம்.

இந்தத் திட்டம் அதன் செல்லுபடியாகும் காலம் முழுவதும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த புதிய திட்டங்கள், OTT சந்தாக்கள் மற்றும் போதுமான டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாறுபட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், போட்டி டெலிகாம் சந்தையில் பல்வேறு பயனர் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதை ஜியோ நோக்கமாகக் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 175 prepaid recharge plan With 12 OTT Channel Subscription Launched 10GB Total Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X