யாரும் போக மாட்டீங்க.. ரூ.175-க்கு இறக்கிய அம்பானி.. குஷியில் Jio கஸ்டமர்ஸ்.. 10 ஜிபி டேட்டா.. 12 ஓடிடி சந்தா!
இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் ஜூலை 3ஆம் தேதியன்று உயர்த்தப்பட்டன. இந்த புதிய கட்டணங்களைவிட பிஎஸ்என்எல்லில் மலிவாக திட்டங்கள் இருப்பதால், அந்த நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உண்மையில் ஜியோவில் கிடைக்கும் டேட்டா வேகம் மற்றும் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை ஆராய்ந்தால் அதிக சலுகைகள் கொடுப்பது ஜியோ மட்டுமே என்பதை மறுக்க முடியாது. இப்போது களமிறங்கி இருக்கும் திட்டமும் அப்படித்தான்.
பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலையிலும், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் கிடைக்காத 4ஜி வேகத்திலும் ஜியோவிடம் 2 திட்டங்கள் இருக்கின்றன. முதல் திட்டம் டேட்டா மற்றும் ஓடிடி சலுகையையும், 2ஆவது திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையைும் கொடுக்கிறது.

ஜியோ ரூ 175 திட்ட விவரங்கள் (Jio Rs 175 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. இந்த சலுகைகளை பார்த்தால், மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கிறது. ஏனென்றால், டேட்டா உடன் 12 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 10 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த 10 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கும். ஓடிடி ஆப்களை பார்க்கையில், சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் கான்ச்சா லங்கா (Kanchha Lannka) ஆகிய ஓடிடிகளை பெறலாம்.
அதேபோல பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுபே (DocuBay), எபிக் ஆன் (EPIC ON) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஆப்களையும் பயன்படுத்தலாம். ஜியோசினிமா பிரீமியம் சந்தாவை மை ஜியோ ஆப் (MyJio) மூலம் கூப்பனாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுக்கு பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, வேல்யூ சலுகையின் கீழ் வருகிறது. ஆகவே, அதிகப்படியான டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. ஆனால், டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற முக்கியமான சலுகைகள் கொடுக்கப்படும். 4ஜி திட்டங்களில் இதுதான் மலிவான விலையில் 28 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது.
ஆகவே, இந்த வேலிடிட்டி நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அதேபோல 300 எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கிடைக்கிறது. தினசரி லிமிட் இல்லாமல், தேவைக்கு ஏற்ப வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல டேட்டாவும் கிடைக்கிறது.
அதாவது, மொத்தமாக 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை வருகிறது. இந்த திட்டத்தில் ஓடிடி சலுகைகள் கிடையாது. இருப்பினும், ஜியோ நிறுவனத்தின் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சந்தா கொடுக்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்லில் இதுபோன்ற ஓடிடி சந்தா கொண்ட திட்டங்கள் கிடையாது. அதேபோல பெரும்பாலான நகரங்கள் மற்றும் கிராமங்களில் 4ஜி சேவை கிடைக்காது. ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களில் திட்டங்கள் மற்றும் வேகம் இருக்கும். ஆனால், குறைவான வேலிடிட்டி மற்றும் ஓடிடி சலுகைகளே கிடைக்கின்றன. ஜியோவே பெஸ்ட்டாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications