Home
News

Jio SIM-க்கு ரூ.55 போதும்.. 1000+ டிவி சேனல்கள்.. ரூ.175-க்கு 10 ஓடிடி சந்தா.. தூக்கி சாப்பிட்ட அம்பானி!

ரூ.200 இருந்தால் போதும், 1000+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 10 ஓடிடி சந்தாவையும் பெற்று கொள்ளலாம். இது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தில் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால், ஜியோ டிவி ஆப் வழியாக லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, ஜியோ ரூ.55 திட்டம் மற்றும் ஜியோ ரூ.175 திட்டம் ஆகியவற்றில் கிடைக்கும் சலுகைகளை பார்க்க இருக்கிறோம். முதலாவது திட்டம் லைவ் டிவி சேனல்கள் மற்றும் டேட்டாவை மட்டுமே கொடுக்கும். 2ஆவது திட்டம் ஓடிடி ஆப்களின் சந்தா மட்டும் டேட்டாவை மட்டுமே கொடுக்கும். ஆகவே, 2 திட்டங்களுக்கும் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும்.

Jio SIM-க்கு ரூ.55 போதும்.. 1000+ டிவி சேனல்கள்.. ரூ.175-க்கு 10 OTT!

அதாவது, ஏற்கனவே வாய்ஸ் கால்களுடன் ஆக்டிவில் இருக்கும் திட்டத்தை வைத்து இருக்கும் கஸ்டமர்கள் மட்டுமே, இந்த திட்டங்களை பெற்று கொள்ள முடியும். டேட்டா திட்டங்களாக இருக்கும் இந்த திட்டங்களில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போது, ஒவ்வொரு திட்டமாக தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.55 திட்ட விவரங்கள் (Jio Rs 55 Plan Details): இந்த திட்டம் டேட்டா மற்றும் லைவ் டிவி சேனல்களுடன் கிடைக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இருக்கிறது. ஆகவே, டேட்டா மற்றும் லைவ் டிவி சேனல்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். டேட்டாவை பார்க்கையில் வெறும் 3 ஜிபி மட்டுமே கிடைக்கிறது.

இந்த 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். லைவ் டிவி சேனல்களை பார்க்கையில், 1000+ சேனல்கள் கிடைக்கின்றன. ஜியோஸ்டார் (JioStar), சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment) மற்றும் சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) சேனல்கள் (சன் டிவி, கேடிவி உள்ளிட்ட சேனல்கள்) கிடைக்கின்றன.

மேலும், வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி (Warner Bros. Discovery) மற்றும் ஈடிவி (ETV) நிறுவனத்தின் நெட்வொர்க் சேனல்களும் கிடைக்கின்றன. ஸ்டார் பிளஸ் எச்டி (Star Plus HD), கலர்ஸ் எச்டி (Colors HD), செட் எச்டி (SET HD), சோனி சாப் எச்டி (Sony SAB HD) உள்ளிட்ட சேனல்கள் கிடைக்கும். டிஸ்கவரி சேனல் (Discovery Channel), அனிமல் பிளானட் (Animal Planet) வருகின்றன.

ஈடிவி எச்டி (ETV HD), ஈடிவி தெலுங்கு (ETV Telugu) கிடைக்கின்றன. இப்படி எச்டி சேனல்களையும் இந்த ஜியோ ரூ.55 திட்டம் கொடுத்துள்ளது. இதில் லைவ் டிவி சேனல்களை மட்டுமே பார்த்து கொள்ள முடியும். இதேபோல ஓடிடி சந்தா மட்டுமே வேண்டுமானால், ஜியோ ரூ 175 திட்டத்தை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம்.

ஜியோ ரூ 175 திட்ட விவரங்கள் (Jio Rs 175 Plan Details): இந்த டேட்டா மற்றும் ஓடிடி சந்தா திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் டிஸ்கவரிபிளஸ் (Discovery+) கிடைக்கிறது. மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanccha Lannka), ஈடிவி வின் (ETV Win) உள்ளது.

சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) ஓடிடி சந்தா வருகிறது. டேட்டாவை பார்க்கையில் 10 ஜிபி கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். ரூ.200 விலைக்குள் இந்த திட்டங்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 175 Plan With 10 OTT Subscriptions 28 Days Validity 10GB Data Check Data Only Pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X