Home
News

ரூ.175-க்கு அம்பானி ஆட்டம்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. 10 ஜிபி டேட்டா.. 10+ ஓடிடி ஆப்கள் சந்தா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களாக இருந்தால், மலிவான விலைக்கு 10+ ஓடிடி ஆப்களின் சந்தாவுக்கு இந்த டேட்டா திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சோனிலிவ் முதல் சன்நெக்ஸ்ட் வரையில் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது.

இதுவொரு டேட்டா + ஓடிடி சந்தா கொண்ட திட்டமாக இருக்கிறது. ஆகவே, இதை பெறுவதற்கு கஸ்டமர்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த திட்டம் கொடுக்காது. இருப்பினும், லம்ப்-சம் டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

ரூ.175-க்கு அம்பானி ஆட்டம்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. 10 ஜிபி டேட்டா!

ஜியோ ரூ 175 திட்ட விவரங்கள் (Jio Rs 175 Plan Details): சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் ஹாலிவுட் பிரியர்களுக்காக லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) சந்தா கிடைக்கிறது. மேலும், டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் கான்ச்சா லங்கா (Kanccha Lannka) கிடைக்கிறது. இதுபோக ஈடிவி வின் (ETV Win), சாவ்பால் (Chaupal) உள்ளது.

மேலும், ஹோய்சோய் (Hoichoi) ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. 10 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இதை 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம். தினசரி லிமிட் கிடையாது. இதே ஓடிடி சந்தாவை வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்களுடன் பெற விரும்பினால், ரூ.445 திட்டம் சரியாக இருக்கும்.

ஜியோ ரூ 445 திட்ட விவரங்கள் (Jio Rs 445 Plan Details): சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் கான்ச்சா லங்கா (Kanccha Lannka), ஈடிவி வின் (ETV Win), சாவ்பால் (Chaupal) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், ஃபேன்கோட் (FanCode) சந்தாவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சந்தாக்களை 28 நாட்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஏனென்றால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இதே திட்டத்தில் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவானது (JioHotstar Mobile Subscription) 3 மாதங்களுக்கு கிடைக்கும். ஆகவே, 28 நாட்களுக்கு பிறகு அடுத்த திட்டத்தை பெறும்போது தொடர்ந்து கிடைக்கும்.

இந்த ஓடிடி சந்தா போக ஜியோ ஏஐ கிளவுட் சந்தா வழியாக 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதிலுநம் 5 டிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகைகள் போக வழக்கமான வாய்ஸ் கால்கள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் உள்ளது. 100 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு ஆக்டிவ் திட்டம் தேவையில்லை.

Best Mobiles in India

English summary
Jio Rs 175 Plan With 10 GB Data 28 Days Validity 10 Plus OTT Apps Check Entertainment Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X