Home
News

அம்பானிக்கு கும்பிடு.. வெறும் ரூ.175 போதும்.. ஜியோ TV பிரீமியம்.. 10 ஓடிடி சந்தா.. 10ஜிபி டேட்டா.. வேலிடிட்டி?

இந்தியாவின் ஒட்டுமொத்த ஓடிடி பிரியர்களையும் ஒரே திட்டத்தில் தட்டித் தூக்கும்படியான சலுகைகளை வெறும் ரூ.175 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. 10 ஓடிடி ஆப்களின் சந்தா, டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இதேபோல தினசரி டேட்டா, வாய்ஸ் கால்களுடன் மற்றொரு திட்டத்தில் 10 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது. ஜியோ டிவி பிரீமியம் (Jio TV PREMIUM) சலுகையின் கீழ் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ டிவி பிரீமியம் திட்டம் ரூ 175 (Jio TV PREMIUM Plans Rs 175): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளை இதில் எதிர்பார்க்க வேண்டாம். டேட்டா சலுகையை பார்க்கையில், 10 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.

அம்பானிக்கு கும்பிடு.. வெறும் ரூ.175 போதும்.. ஜியோ TV பிரீமியம்!

ஓடிடி சலுகையை பார்க்கையில், ஜியோ டிவி பிரீமியம் சலுகையுடன் 10 ஓடிடி ஆப்களின் சந்தா பயன்படுத்த கிடைக்கிறது. இந்த சந்தாவில் சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Liongates Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi) மற்றும் சாவ்பால் (Chaupal) ஆப்களை பெற்று கொள்ளலாம்.

மேலும், ஹோய்சோய் (Hoichoi) ஆப் கிடைக்கிறது. இந்த ஓடிடி ஆப்களுக்கும் திட்டத்தை போலவே 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் கிடைக்காததால், இந்த சலுகைகளை பெறுவதற்கு உங்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும். இதே ஓடிடி ஆப்களுடன் வாய்ஸ் கால்களுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.

ஜியோ டிவி பிரீமியம் திட்டம் ரூ 445 (Jio TV PREMIUM Plans Rs 445): இந்த ஜியோ டிவி பிரீமியம் சந்தா கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் ஓடிடி ஆப்கள் (OTT Apps) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டா தினசரிக்கு வருகிறது.

இந்த டேட்டா மட்டுமல்லாமல், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் வெல்கம் சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு இலவச 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகையுடன் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பேன்கோட் (FanCode) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகை கூடுதலாக கிடைக்கிறது. மற்ற ஓடிடி ஆப்களை பார்க்கையில், முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட்ஸ் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி மற்றும் சாவ்பால் ஆகியவற்றின் சந்தா கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 175 Plan Offers 28 Days Validity 10GB Data 10 OTT Subscriptions Check Jio TV PREMIUM Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X