Home
News

புதுசா இறக்கிட்டாரு.. மறுபடியும் ரூ.175-க்கு வந்த அம்பானி.. இல்லனா ரூ.189-க்கு போகலாம்.. Jio-வுக்கு 2 திட்டம்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கட்டண உயர்வுக்கு பிறகு அதிருப்தி அடைந்த கஸ்டமர்களை தக்க வைக்க 2 புதிய திட்டங்களை களமிறக்கியது. ஒரு திட்டம் அடிமட்ட விலையில் ஓடிடி சந்தா (OTT Subscription) மற்றும் டேட்டாவை கொடுக்கிறது. மற்றொரு திட்டம் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) கொடுக்கிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் (Jio Prepaid Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோவில் கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.189 மதிப்பில் மட்டுமே ஆரம்ப விலை திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை பேக் செய்யப்பட்டன. அதன்பிறகு கஸ்டமர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ரூ.175 மற்றும் ரூ.198 விலையில் திட்டங்கள் களமிறக்கப்பட்டுள்ளது.

புதுசா இறக்கிட்டாரு.. மறுபடியும் ரூ.175-க்கு வந்த அம்பானி.. இல்லனா?

ரூ.189 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடையாது. ஆகவே, 5ஜி டேட்டாவுக்கு குறைந்தது ரூ.349 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. இதற்காகவே ரூ.198 விலையிலான திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல ஓடிடி பிரியர்களை ஒட்டுமொத்தமாக தூக்கும்படி ரூ.175 மதிப்பிலான திட்டத்தில் 12 ஓடிடி ஆப்களை களமிறக்கி இருக்கிறது ஜியோ நிறுவனம்.

ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): ஜியோவில் அன்லிமிடெட் 5ஜி சலுகை வேண்டுமானால், அடிமட்ட விலைக்கு கிடைக்கும் இந்த திட்டத்துக்கு செல்லலாம். இதற்கு பிறகு ரூ.349 விலையில் மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். இந்த டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 4ஜி டேட்டாவுக்கு மட்டும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) செய்து கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திவிட்டு, விலை ஏற்றம் காரணமாக அதை பயன்படுத்த முடியாமல் போன கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட திட்டம் நல்ல ஆப்ஷனாக இப்போது வந்துள்ளது.

ஜியோ ரூ 175 திட்ட விவரங்கள் (Jio Rs 175 Plan Details): இந்த திட்டத்தில் முழுக்க முழுக்க ஓடிடி சந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டேட்டா சலுகைகயும் கிடைக்கிறது. 12 ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். ஆகவே, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற மற்ற சலுகைகளை இந்த திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.

இந்த திட்டத்துக்கு 10 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், கான்ச்சா லங்கா (Kanchha Lannka), டாகுபே (DocuBay), பிளானட் மராத்தி (Planet Marathi), எபிக் ஆன் (EPIC ON), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். அடிமட்ட விலையில் அதிக ஓடிடி வேண்டுமானால், இந்த திட்டத்துக்கு செல்லலாம்.

ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா அல்லது ஓடிடி சலுகைகள் மிகவும் மலிவான விலைக்கு இந்த 2 ஜியோ திட்டங்களில் கிடைக்கின்றன. இந்த சலுகைகளை ஒப்பிடுகையில் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற மற்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் அதிக விலையே இருக்கின்றன. கஸ்டமர்களை தக்க வைக்க வரும் நாட்களில் இதுபோன்ற பல புதிய திட்டங்கள் வரலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 175 Plan Offers 10GB Data 12 OTT Apps 28 Days Validity Check Cheapest Jio Plans Under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X