Home
News

Jio SIM-க்கு ஒரே போடு.. மாதம் ரூ.145 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 3600 SMS!

ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் மலிவான விலையில் வருடம் முழுவதும் அதை ஆக்டிவாக கண்ணை மூடிக்கொண்டு இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டம் ஜியோ நிறுவனத்தின் கிடையாது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) அல்லது லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) அல்லது லம்ப்-சம் எஸ்எம்எஸ் (Lump-sum SMS) கொண்ட திட்டங்கள் மட்டுமே கிடைத்துவந்தன. ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட மலிவான திட்டங்கள் சிம் ஆக்டிவுக்கு தேவைப்பட்டன.

Jio SIM-க்கு ஒரே போடு.. மாதம் ரூ.145 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி!

இதானால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட திட்டங்களை களமிறக்கின. இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு டேட்டா, ஓடிடி போன்ற எந்தவித கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படாது. எப்போது வேண்டுமானாலும் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம்.

இதை தவிர வேறு சலுகைகள் கிடைக்காது. இதில் ஜியோ நிறுவனத்தின் ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, ஒரு மாதத்துக்கு 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஜியோவில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்க இதை ரீசார்ஜ் செய்யலாம். ஆகவே, ஜியோவின் மலிவு விலை வருடாந்திர திட்டமாகவும் உள்ளது.

ஜியோ ரூ.1748 வாய்ல் ஒன்லி திட்டம் (Jio Rs 1748 Voice Only Plan): இந்த திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு 28 நாட்களுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால் வெறும் ரூ.145 மட்டுமே தேவைப்படுகிறது. இது மிகவும் மலிவான விலையாக இருக்கிறது.

ஆகவே, மாதத்துக்கு ரீசார்ஜ் செய்வதை விட வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, இப்படி மலிவான விலைக்கு திட்டங்களை பெற்று கொள்ள முடியும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களின் (Roaming Calls) சலுகை கொடுக்கப்படும்.

மேலும், வருடம் முழுதுக்கும் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இந்த எஸ்எம்எஸ்கள் முன்கூட்டியே முடிந்தால், அதன் பிறகு கட்டணம் செலுத்தி அனுப்பி கொள்ளலாம். ஆனால், வாய்ஸ் கால்களின் எந்த கட்டுப்பாடும் இருக்காது. வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் கிடைப்பதால், சிம் ஆக்டிவ் தொடர்ந்து கிடைக்கும். வேறு ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது.

ஒருவேளை டேட்டா தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப்களையும் அணுகும்படியான சலுகைகளை இந்த ஜியோ ரூ.1748 திட்டம் கொடுத்துள்ளது. இதற்கும் கீழ் ஒரு வாய்ஸ் ஒன்லி திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ.448 வாய்ஸ் ஒன்லி திட்டம் (Jio Rs.448 Voice Only Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 1000 எஸ்எம்எஸ்களை கொடுக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். வேறு சலுகைகள் கிடைக்காது.

Best Mobiles in India

English summary
Jio Rs 1748 Voice Only Plan With 336 Days Validity Unlimited Voice Call Check Yearly SIM Active Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X