Jio.. ரீசார்ஜ் மேல ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.145 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் ரீசார்ஜ் மேல் ரீசார்ஜ் செய்யும்படியான அடிமட்ட விலைக்கு வருடாந்திர திட்டம் (Yearly Plan) கிடைக்கிறது. வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், சிம் ஆக்டிவ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ வேல்யூ திட்டத்தின் (Jio Value Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா திட்டங்கள் (Data Plan), வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plan) போன்று சலுகைகளுக்கு ஏற்ப திட்டங்களை வகைப்படுத்தி கொடுக்கின்றன. இதில் ஜியோ நிறுவனம் வேல்யூ திட்டங்களின் கீழ் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுக்கிறது. ஆனால், 2 திட்டங்கள் மட்டுமே கிடைக்கின்றன. ரூ.1748 விலைக்கு வருடாந்திர திட்டம் கிடைக்கிறது.

ஜியோ ரூ 1748 திட்டத்தின் முழு விவரங்கள் (Jio Rs 1748 Plan Full Details): இதில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), சிம் ஆக்டிவ் (SIM Active) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) ஆகிய சலுகைகள் மட்டுமே கிடைக்கும். டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 1 ஜிபி டேட்டா கூட கொடுக்கப்படாது. 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதில் வாய்ஸ் கால்களை தினசரிக்கு செய்து கொள்ளலாம். ஆனால், எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையில் கிடைப்பதால், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். 336 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே 3600 எஸ்எம்எஸ்களும் முடிந்துவிட்டால், அதன்பிறகு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த சலுகைகளுடன் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் கிடைக்கிறது. இதுவரை பார்த்த சலுகைகளை தவிர வேறு எந்த சலுகைகளும் இந்த திட்டத்துக்கு கிடைக்காது. இதைவிட கம்மியான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டம் வேண்டுமானால், ரூ.448 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதிலும் டேட்டா கிடைக்காது.
ஜியோ ரூ 448 திட்டத்தின் முழு விவரங்கள் (Jio Rs 448 Plan Full Details): இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். ஆகவே, குறைந்தபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் தொடங்குகிறது. இதைவிட கம்மியான வேலிடிட்டியுடன் திட்டங்கள் கிடைக்காது. அதாவது, 28 நாட்கள், 30 நாட்கள், 56 நாட்களுக்கு கிடைக்காது.
முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை வருகிறது. 1000 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேல்யூ விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
எப்படி ரீசார்ஜ் செய்வது?
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் கடைசி விருப்பமாக வேல்யூ திட்டங்கள் இருக்கும். இதை கிளிக் செய்தால், வாய்ஸ் ஒன்லி திட்டங்கள், மலிவு விலை திட்டங்கள் மற்றும் ஐசிஆர் திட்டங்கள் பிஎஸ்என்எஸ் ஆகியவை இருக்கும். முதலிலேயே இருக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இதில் முதலாவது திட்டமாக ஜியோ ரூ.1748 விலை கொண்ட திட்டம் இருக்கும். இரண்டாவதாக ஜியோ ரூ.448 விலை கொண்ட திட்டம் இருக்கும். இதில் உங்களது விருப்ப திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதற்கு கீழ் இருக்கும் மலிவு விலை திட்டங்களில் லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கும்.


Click it and Unblock the Notifications








