ஜியோ போட்ட போடு.. மாசம் ரூ.146-க்கு 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 3600 எஸ்எம்எஸ்கள்!
ஜியோ (Jio) நிறுவத்தின் வேல்யூ திட்டத்தில் (Value Plan) மாதத்துக்கு வெறும் ரூ.146 செலவில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. இதைவிட மலிவான விலைக்கு ஜியோவில் வருடாந்திர திட்டம் கிடையாது. ஆகவே, இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வாய்ஸ் கால்கள் மட்டுமே வருடம் முழுவதும் போதும், டேட்டா சலுகைகள் வேண்டாம் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஜியோ நிறுவனத்தில் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களில் டேட்டா சலுகை முற்றிலும் கிடைக்காது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகள் மட்டுமே கிடைக்கும்.

இதில் வருடாந்திர திட்டம் மாதத்துக்கு ரூ.146 செலவில் கிடைக்கிறது. அதாவது, அந்த திட்டத்தின் அசல் விலை ரூ.1,748ஆக இருக்கிறது. இதில் 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு உங்களுக்கு வெறும் ரூ.146 மட்டுமே செலவாகிறது. இந்த விலைக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
ஜியோ ரூ 1,748 திட்ட விவரங்கள் (Jio Rs 1,748 Plan Details): இந்த திட்டத்தை வேல்யூ திட்டங்களின் கீழ் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். இதுவொரு வாய்ஸ் ஒன்லி திட்டமாக (Voice Only Plan) இருக்கிறது. ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், அந்த நாட்கள் முழுவதும் ஜியோ கஸ்டமர்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைத்துவிடும்.
மேலும், வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை கொடுக்கிறது. இந்த சலுகைக்கு அடுத்து எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஆனால், இதை தினசரிக்கு 100 என்பது போல அனுப்பி கொள்ள முடியாது. 3,600 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கிடைக்கும்.
இதை ஜியோ கஸ்டமர்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால், 336 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே முழு எஸ்எம்எஸ்களையும் பயன்படுத்தி முடித்துவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டி இருக்கும். இந்த சலுகைகள் மட்டுமே முக்கிய சலுகைகளாக இருக்கின்றன.
இருப்பினும், ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAI Cloud) சலுகைகள் இந்த வேல்யூ திட்டத்துக்கும் பொருந்தும். இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): இந்த திட்டம் ஆரம்ப விலை வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருக்கிறது. அதாவது, வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்றாலும், குறைந்தபட்சம் ரூ.448 விலைக்கு கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்காது.
அதேபோல ஆரம்பமே 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 28 நாட்கள் அல்லது 56 நாட்கள் போன்ற வேலிடிட்டியில் வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்காது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதேபோல 1,000 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் இதில் கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களை வாய்ஸ் கால்களுக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டா தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








