Home
News

இனிமே மாதாந்திரம் ரூ.145 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. லம்ப்-சம் எஸ்எம்எஸ்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கஸ்டமர்களுக்கு மாதாந்திரம் ரூ.145 செலவில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) கொடுக்கும் திட்டம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் (Yearly Prepaid Plan), டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தா இருக்கிறதா? இவ்வளவு மலிவான விலைக்கு எப்படி கிடைக்கிறது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டிராய் என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுபடி இந்த ப்ரீபெய்ட் திட்டம் களமிறக்கப்பட்டுள்ளது. அதாவது, டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மட்டுமே அடங்கிய திட்டத்தை கொடுக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டிருந்தது. அதோடு அதை மலிவான விலைக்கு கொடுக்கவும் உத்தரவிட்டது.

இனிமே மாதாந்திரம் ரூ.145 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ்!

ஆகவே, ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால்கள் மட்டுமே அடங்கிய திட்டத்தை கொடுத்தது. அதில் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த ஜியோ ரூ 1748 திட்டம் (Jio Rs 1748 Plan) வெளியானது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, டேட்டா சலுகைக்கு வாய்ப்பில்லை.

ஜியோ ரூ 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இந்த வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் கொடுக்கப்படும். இதில் வாய்ஸ் கால்கள் சலுகையானது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) சலுகையில் கிடைக்கும்.

இது தினசரிக்கு கிடைக்கும். ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகள் அப்படி கிடையாது. லம்ப்-சம் சலுகையில் கிடைக்கிறது. ஆகவே, 3600 எஸ்எம்எஸ்களானது 336 நாட்களுக்கும் கிடைக்கும். இதை தேவைப்படும்போது அனுப்பி கொள்ளலாம். இதில் டேட்டா சலுகை கிடையாது என்பதால், டேட்டா வவுச்சர்களுக்கு ஜியோ கஸ்டமர்கள் செல்லலாம்.

ஜியோ ஆப்களை பொறுத்தவரை, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவிட்டி (SIM Activity) மற்றும் வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், ஜியோ கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் மட்டுமே மலிவான விலைக்கு கிடைக்கும்.

ஏனென்றால், இதற்கான மாதாந்திர (28 நாட்கள்) செலவை கணக்கிட்டால், உங்களுக்கு வெறும் ரூ.145 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு இது நல்ல சலுகைகளாகவே இருக்கிறது. இதைவிட கம்மியான வேலிடிட்டி மற்றும் விலையில் வாய்ஸ் ஒன்லி திட்டம் வேண்டுமானால், ஜியோ ரூ 448 திட்டம் (Jio Rs 448 Plan) இருக்கிறது. இதன் சலுகைகள் எப்படி?

இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும். அதேபோல ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகையும் கொடுக்கப்படும். இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும்.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், 84 நாட்களுக்கும் சேர்த்து 1000 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இந்த 2 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களையும் (Jio Prepaid Plan) வாய்ஸ் கால்கள் மட்டுமே தேவைப்படும் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X