ஒரே Jio ரீசார்ஜ்.. மாதம் ரூ.145 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஏர்டெல் நிறுவனத்துக்கு நிகரான மட்டுமல்லாமல், அதைவிட மலிவான விலைக்கு ஜியோ (Jio) நிறுவனம், வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுத்து வருகிறது. இதில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்களை மட்டுமே கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வெறும் ரூ.145 மாத செலவில் பெற்று கொள்ளலாம். கூடுதலாக எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களும் கிடைக்கும்.
அதேபோல 3 மாதங்களுக்கு வேலிடிட்டி போதுமானால் மற்றொரு வாய்ஸ் ஒன்லி திட்டத்தையும் ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. சொல்லப்போனால், 3 மாதங்களுக்கு மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. இந்த 2 திட்டங்களின் சலுகைகளை இப்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1748 Prpaid Plan): 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த திட்டம் மூலம் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படாது.
ஆகவே, 3600 எஸ்எம்எஸ்களை கூடுதலாக பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே திட்டத்துக்கு கிடைக்கின்றன. மேலும், பொதுவாக கிடைக்கும், ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் இதில் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் மாத செலவு ரூ.145 ஆக மட்டுமே இருப்பதால், மலிவாக கிடைக்கும் திட்டமாக இருக்கிறது.
இந்த திட்டத்தில் டேட்டா வவுச்சர்களுக்கு ஆட் செய்து கொள்ளலாம். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற முடியாது. தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். இதில் 1 ஜிபி கூட டேட்டா கிடைக்காது என்பதால், டேட்டா வவுச்சர்களை மட்டுமே 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டத்தை விரும்பினால், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு திட்டம் கிடைக்கிறது. சொல்லப்போனால், இது ஆரம்ப விலை வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருக்கிறது. ஆகவே, இதற்கும் கம்மியாக வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்காது. ஆகவே, மலிவான விலைக்கு 84 நாட்கள் சிம் ஆக்டிவ் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.
ஜியோ ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 448 Prpaid Plan): 84 நாட்கள் வேலிடிட்டியை இந்த ஜியோ ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு சலுகைகளை கொடுத்து இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இதிலும் பெற்று கொள்ளலாம்.
ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்த எஸ்எம்எஸ்களைவிட இதில் கம்மியாகவே கிடைக்கும். ஆகவே, மூன்று மாதங்களுக்கும் மொத்தமாகவே 1000 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். மேலும், ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டங்கள் வேல்யூ பிரிவில் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications
