Home
News

Jio சிம் கார்டு இருக்கா? அடுத்த 1 வருசத்துக்கு இதை மட்டும் பண்ணிடுங்க.. வாய்ஸ் கால்கள்.. எஸ்எம்எஸ்.. டேட்டா?

இப்போது, வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களைவிட பாதிக்குப்பாதி விலை கம்மியாக வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் கிடைக்கின்றன. ஆனால், ரீசார்ஜ் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரே விலை போல தோன்றும். ஆனால், சலுகைகள் வெவ்வேறாக இருக்கும்.

ஜியோவில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டத்தில் விலை ரூ.1748 ஆக இருக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் ரூ.1,799 விலைக்கு கிடைக்கும் திட்டத்தில் வெறும் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, விலையை மட்டும் பார்க்காமல், உள்ளே இருக்கும் சலுகைகளையும் பார்த்து ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

Jio சிம் கார்டு இருக்கா? அடுத்த 1 வருசத்துக்கு இதை மட்டும் பண்ணிடுங்க!

ஜியோ ரூ.1748 திட்ட நன்மைகள் (Jio Rs 1748 Plan Benefits): வாய்ஸ் ஒன்லி திட்டங்களில் அதிக வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஜியோ நிறுவனத்தின் ஆப்களும் கிடைக்கும்.

இது தவிர வேறு சலுகைகள் கொடுக்கப்படாது. ஆகவே, 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்கப்படுகின்றன. மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப்களை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

இந்த சலுகைகளை தவிர வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது. செகண்டரி சிம் கார்டாக ஜியோவை வைத்திருக்கும் கஸ்டமர்கள் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் விரும்பினால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், மறுப்புறம் ஜியோ ரூ.1,799 திட்டத்தில் டேட்டா, ஓடிடி, கிளவுட் உள்ளிட்ட ஏகப்பட்ட சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

ஜியோ ரூ.1799 திட்ட நன்மைகள் (Jio Rs 1799 Plan Benefits): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 28 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட 9 மாதங்கள் குறைவாக வேலிடிட்டி கொடுக்கிறது. இதற்கு ஏற்ப சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 84 நாட்களில் 252 ஜிபி டேட்டாவை பெறலாம். 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இந்த ஜியோ ரூ.1799 திட்டம் கொடுக்கிறது. ஆனால், முந்தைய திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கூட கிடைக்கவில்லை.

மேலும், இந்த திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar: Mobile) சந்தா கிடைக்கிறது. 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை ஜியோ ஏஐ கிளவுட் ஆப் வழியாக பயன்படுத்தலாம். 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் சந்தா கிடைக்கிறது. இந்த கேன்வா சந்தாவை தனியாக பெற்றால் ரூ.1590 தேவைப்படும். ஆகவே, கூடுதல் சலுகைகளுக்கு ஏற்ப விலை உள்ளது. தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 1748 Plan With 336 Days And Rs 1799 Plan With 84 Days Validity Check OTT Data Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X