Home
News

Jio க்கு 336 நாட்கள்.. Airtel க்கு 365 நாட்கள்.. மட்ட விலைக்கு 1 வருட திட்டம்.. வாய்ஸ் கால்கள்.. எது பெஸ்ட்?

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களில் மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டங்களில் எதில் அதிக சலுகைகள் கிடைக்கிறது, அந்த திட்டங்களின் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள் எவ்வளவு கொடுக்கப்படுகிறது, இந்த திட்டங்களுக்கு மாத செலவு எவ்வளவு, உள்ளிட்ட ஒட்டுமொத்த விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டங்கள் வாய்ஸ் கால்களை மட்டுமே கொடுப்பவையாக இருக்கின்றன. ஆகவே, டேட்டா சலுகை துளியும் கிடைக்காது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு கிடைக்காது. மொத்தமாக கொடுக்கப்படும். இதை அந்தந்த கஸ்டமர்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, ஒவ்வொரு திட்டமாக தெரிந்து கொள்ளலாம்.

Jioக்கு 336 நாட்கள்.. Airtelக்கு 365 நாட்கள்.. மட்ட விலைக்கு 1 வருடம்!

ஜியோ ரூ.1,748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs.1,748 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. 336 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டம் ஏர்டெல்லை விட மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்கள் கொடுக்கப்படும்.

இதை வருடம் முழுவதும் செய்து கொள்ளலாம். அதேபோல ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் இதில் கிடைக்கிறது. அடுத்த முக்கிய சலுகையாக 3,600 எஸ்எம்எஸ்கள் இருக்கின்றன. இதை தினசரிக்கு லிமிட்டில் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உங்களது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால், முடிந்துவிட்டால் அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டி இருக்கும். இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAI Cloud) சலுகைகள் இந்த வருடாந்திர திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே இதில் வருகின்றன. இதற்கான மாத செலவு வெறும் ரூ.146ஆக மட்டுமே இருக்கிறது.

இந்த திட்டத்தை விட ரூ.101 விலை அதிகமாக ஏர்டெல்லின் வருடாந்திர திட்டம் கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அதேபோல கூடுதல் சலுகைகளையும் இந்த திட்டம் வைத்திருக்கிறது. குறிப்பாக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சப்ஸ்கிரிப்ஷன் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இதன் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1,849 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.1,849 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகள் கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தை போலவே இருக்கும். ஆனால், வேலிடிட்டி மற்றும் விலையில் மாற்றங்கள் இருக்கும். அதேபோல ஜியோவில் ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட் கிடைத்தது. அதற்கு போட்டியாக இதில் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு முன்பே சொன்னதை போல 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது ஜியோவை விட அதிகமாகவும். அதே நேரத்தில் விலையும் அதிகமாக இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும், 3600 எஸ்எம்எஸ்களையும் வேலிடிட்டி முழுவதும் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் ஜியோவை போலவே இருக்கிறது.

ஆனால், இதில் கூடுதலாக வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம்களை அலெர்ட் செய்து கொள்ளும் சலுகை கிடைக்கிறது. அதேபோல பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சப்ஸ்கிரிப்ஷன் 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. இதுபோக 30 நாட்களுக்கு ஒரு ட்யூன் வீதம் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இப்படி பல்வேறு சலுகைகள் வருகின்றன.

இந்த திட்டம் மாதத்துக்கு ரூ.155 செலவில் கிடைக்கிறது. இது ஜியோவைவிட கூடுதல் விலையாகும். அதே நேரத்தில் வேலிடிட்டி அதிகமாகும். ஆகவே, விலையை பொறுத்து சலுகைகள் இருக்கின்றன. இருப்பினும், ஜியோ நிறுவனம் மலிவான விலைக்கு திட்டத்தை வைத்திருக்கிறது. ஆகவே, விலையில் ஜியோவும், வேலிடிட்டியில் ஏர்டெல்லும் முந்துகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1748 Plan Vs Airtel Rs 1849 Plan With Yearly Validity Unlimited Voice Voice Calls Here Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X