Home
News

Jio, Airtel-க்கு ஒரே போடு.. அடுத்த 1 வருடத்துக்கு இதுதான்.. வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டும்.. எந்த திட்டம் பெஸ்ட்?

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களிடம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) அடிமட்ட விலைக்கு கொடுக்கும் வருடாந்திர திட்டங்கள் (Yealry Plans) இருக்கின்றன. வாய்ஸ் ஒன்லி திட்டங்களாக இருப்பதால், டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. இரண்டு நிறுவனங்கள் கொடுக்கும் திட்டங்களின் விலையில் மாற்றங்கள் இருக்கின்றன.

அதேபோல சலுகைகளும் மாறுபடுகின்றன. ஆகவே, வருடாந்தி வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் எந்த நிறுவனம் போதுமான சலுகைகளை கொடுக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஜியோ ரூ.1748 வாய்ஸ் ஒன்லி திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் ஒன்லி திட்டங்களின் சலுகைகளை முதலில் பார்க்கலாம். பிறகு முடிவுக்கு வரலாம்.

Jio, Airtel-க்கு ஒரே போடு.. அடுத்த 1 வருடத்துக்கு இதுதான்.. வாய்ஸ்!

ஜியோ ரூ.1748 திட்டம் (Jio Rs 1748 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு டெலிகாம் கணக்கின்படி வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், காலண்டர் கணக்கின்படி 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, டெலிகாம் நிறுவனங்களை பொறுத்தவரையில் மாதத்துக்கு 28 நாட்கள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன.

ஆகவே, மாதத்துக்கு 28 நாட்கள் வீதம் 12 மாதங்கள் (336 நாட்கள் வேலிடிட்டி) கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். 3600 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். மேலும், ஜியோடிவி (JioTV) சந்தா கிடைக்கும். ஆனால், இலவசமாக கிடைக்கும் கன்டென்ட்கள் மற்றும் சேனல்களை மட்டுமே பார்க்க முடியும்.

ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சலுகையும் இதில் கிடைக்கிறது. இந்த சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. இந்த திட்டம் ஏர்டெல் நிறுவனத்தினுடன் ஒப்பிடுகையில் விலை குறைவாக இருக்கிறது. ஆனால், அதிக விலைக்கு கிடைக்கும் ஏர்டெல் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்த்தால் அது தெரியவரும்.

ஏர்டெல் ரூ.1849 திட்டம் (Airtel 1849 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, எந்த தேதியில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அடுத்த வருடம் அதே தேதி வரையில் இந்த திட்டம் ஆக்டிவாக இருக்கும். வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

ஜியோவை போலவே இந்த திட்டத்திலும் 3600 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். கூடுதல் சலுகைகளை பார்க்கையில், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவானது 1 வருடத்துக்கு கிடைக்கிறது. ப்ரீ-ஹேலோ டியூன்ஸ் சலுகையும் ஒரு வருடத்துக்கு கிடைக்கிறது. மேலும், ஸ்பேம் வாய்ஸ் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களுக்கு அலெர்ட் கிடைக்கிறது.

இந்த சலுகைகளை தவிர வேறு சலுகைகள் கொடுக்கப்படவில்லை. ஜியோ நிறுவனத்தின் திட்டத்தைவிட ரூ.101 விலை அதிகமாக இந்த ஏர்டெல் திட்டம் இருக்கிறது. ஆகவே, விலையை பார்க்கையில் ஜியோ நிறுவனம் மலிவாக இருக்கிறது. அதுவே வேலிடிட்டி பக்கம் பார்த்தால், ஜியோவில் 336 நாட்கள் மற்றும் ஏர்டெல்லில் 365 நாட்கள் கொடுக்கப்படுகிறது.

இதில் ஏர்டெல் பட்டையை கிளப்புகிறது. கூடுதல் சலுகை பக்கம் செல்ல வேண்டாம். பொதுவாக வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களை மட்டுமே பார்த்தால் போதும். ஏனென்றால், பெரும்பாலான கஸ்டமர்கள் அதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். ஏர்டெல்லில் கூடுதலாக 29 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும் ரூ.101 விலை அதிகமாக இருக்கிறது.

வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் வெறும் 29 நாட்களுக்கு ரூ.101 என்பது அதிகமாகவே இருக்கிறது. ஆகவே, விலையில் ஜியோ நிறுவனம் முந்துகிறது. வேலிடிட்டியில் கவனம் செலுத்தினால், ஏர்டெல் திட்டத்துக்கு செல்லலாம். விலை கம்மியாக இருக்க வேண்டுமானால், ஜியோவின் ரூ.1748 திட்டத்துக்கு செல்லலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 1748 Plan Vs Airtel 1849 Plan For Yearly Validity With Unlimited Calls Check Voice Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X