Jio சிம் இருக்கா.. தீபாவளிக்கு இதை விட்ராதீங்க.. மாதம் ரூ.145 போதும்.. 336 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 336 நாட்கள் முழுவதும் அன்ஸிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கும்படி அடிமட்ட விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கிடைக்கிறது. இந்த தீபாவளிக்கு வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்ய திட்டமிடும் கஸ்டமர்கள் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கான மாத செலவு ரூ.145ஆக மட்டுமே இருக்கிறது. ஆனால், இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், அதற்கும் ஆப்ஷன் இருக்கிறது. இந்த 2 வருடாந்திர திட்டங்களின் விவரங்கள் இதோ.
ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1748 Prepaid Plan): ஜியோ கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர ரீசார்ஜ் திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, இதில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல இதுவொரு வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருப்பதால், டேட்டா சலுகைகள் கிடைக்காது. ஒரு வருடத்துக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டும் கொடுக்கும்.

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 336 நாட்கள் வேலிடிட்டி முழுவதும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், 3600 எஸ்எம்எஸ்களை மொத்தமாக பெற்று கொள்ளலாம். இதை தேவைக்கு ஏற்ப அனுப்பி கொள்ளலாம். ஆனால், முடிந்துவிட்டால், கட்டணம் இருக்கும்.
அதேபோல டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. வாய்ஸ் கால்கள் மட்டும் போதும் என்று கேட்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு இதைவிட பெஸ்ட் திட்டம் இருக்காது. 2 சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து, வருடம் முழுவதும் அவர்களது சிம் கார்டை ஆக்டிவாக (SIM Card Active) வைத்திருக்கலாம். இதற்கான செலவும் மலிவாகவே இருக்கிறது.
ஏனென்றால், இந்த திட்டத்தின் மொத்த விலை ரூ.1748ஆ இருந்தாலும், இதை மாதத்துக்கு கணக்கிட்டால் வெறும் ரூ.145 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த விலைக்கு மாதாந்திர வேலிடிட்டியில் திட்டங்கள் கிடையாது. ஆகவே, வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, அந்த திட்டத்துக்கு ஏற்படும் மாத செலவு மிகவும் மலிவாக இருக்கிறது. ஆகவே, இது லாபம் தரக்கூடிய திட்டமாகும்.
இந்த தீபாவளிக்கு வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டருந்தால், இதை தாராளமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAI Cloud) ஆகிய ஆப்கள் அணுக கிடைக்கின்றன. ஆனால், பிரீமியம் அணுகல் கிடைக்காது. இலவசமாக கிடைக்கும் சலுகைகள் மட்டுமே கிடைக்கும்.
தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் வேண்டுமானால், ரூ.3599 திட்டத்துக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதில் விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு ஏற்ப சலுகைகள் கிடைக்கின்றன. டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற வழக்கமாக சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஓடிடி சந்தா, ஜியோஹோம் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.
ஜியோ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாகும். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை உள்ளது.
ஆனால், இதில் கிடைக்கும் ஜியோ ஏஐ கிளவுட் மூலம் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription ) மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. புதிய கஸ்டமர்களுக்கு ஜியோஹோம் (JioHome) சலுகை 2 மாதங்களுக்கு அணுக கிடைக்கிறது. இப்படி பல்வேறு சலுகைகளை இந்த திட்டம் வாரி வழங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








