Home
News

Jio SIM-க்கு கோடி புண்ணியம்.. மாதம் ரூ.145-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டும்!

ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுக்கும் திட்டமானது, மாதத்துக்கு ரூ.145 விலைக்கு கிடைத்தால், ரீசார்ஜ் செய்ய சொல்லவா வேண்டும். அப்படியான திட்டத்தை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெலிகாம் நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட திட்டங்களை கொடுக்கின்றன. ஆனால், 28 நாட்கள் வேலிடிட்டி, 30 நாட்கள் வேலிடிட்டி அல்லது 56 நாட்கள் வேலிடிட்டியில் இந்த திட்டங்களை பெற முடியாது. ஆரம்பமே 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதிகபட்சம் 336 நாட்கள், 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன.

Jio SIM-க்கு கோடி புண்ணியம்! மாதம் ரூ.145-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரை 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் கிடைக்கின்றன. மாதத்துக்கு 28 நாட்கள் வீதம் 3 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களாக இவை பார்க்கப்படுகின்றன. இதில் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1748 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

ஏனென்றால், இந்த திட்டத்தின் மாத செலவானது மலிவாக இருக்கிறது. அதாவது, 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், ரூ.1748 தொகையை 12 ஆல் வகுத்தால், ரூ.145 மட்டுமே மாதத்துக்கு தேவைப்படுகிறது. இந்த விலைக்கு தனியாக திட்டம் கிடையாது. அதுவே 12 மாதங்களுக்கு முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யும்போது, இந்த விலைக்கு பெற முடிகிறது.

இதனாலேயே இந்த திட்டத்தை ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இந்த திட்டத்தை பெற்ற பிறகு டேட்டா தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களை பெற்று கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) அப்கிரேட் செய்ய முடியாது. இதை கவனத்தின் கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ஜியோ ரூ.1748 திட்டம் கொடுத்து இருக்கிறது. 3600 எஸ்எம்எஸ்களையும் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்த வழக்கமாக கொடுக்கப்படும் ஜியோ ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

இதில் ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த ஆப்களில் பிரீமியம் அணுகல்கள் கிடைக்காது. இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கும். டேட்டா தேவைப்பட்டால், ரூ.11 முதல் டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. ரூ.11 திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும்.

இதைவிட கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், ரூ.219 திட்டத்தில் 30 ஜிபி டேட்டா மற்றும் ரூ.289 திட்டத்தில் 40 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். தினசரிக்கு டேட்டா வேண்டுமானால், ரூ.39 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இப்படி பல்வேறு டேட்டா திட்டங்களை பெற்று கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தின் வேல்யூ பிரிவின் கீழ் இந்த திட்டம் கிடைக்கிறது. வேல்யூ பிரிவுக்கு சென்ற பிறகு வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plans) விருப்பத்தை கிளிக் செய்தால் போதும், முதலாவது திட்டமாக இது கிடைக்கும். கீழே இருக்கும் பை (Buy) விருப்பத்தை கிளிக் செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வருடாந்திர திட்டங்கள் பிரிவில் இந்த திட்டம் காண்பிக்கப்படாது.

Best Mobiles in India

English summary
Jio Rs 1748 Plan 336 Days Validity Unlimited Voice Calls 3600 SMS Check Yearly Voice Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X