2026 ஆரம்பமே Jio கையில.. மாதம் ரூ.145 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங்!
ஜியோ நிறுவனத்தில் மாதத்துக்கு ரூ. 145 விலைக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் 2026 ஆம் ஆண்டில் பழைய விலைக்கு கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகையை மலிவான விலைக்கு கொடுக்கும் இந்த திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளன. இந்த திட்டங்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. 2025 ஆம் ஆண்டு பல்வேறு திட்டங்களின் சலுகைகள் குறைக்கப்பட்டது. மலிவான விலை கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் நீக்கப்பட்டன.

ஆனால். ஜியோ நிறுவனத்திலேயே மலிவான விலைக்கு கிடைக்கும் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1748 திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே விலைக்கு தொடர்ந்து கிடைக்கிறது. 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுப்பதால், மாத செலவு ரூ.145ஆக மட்டுமே உள்ளது. இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களை கொண்டுள்ளது.
ஜியோ ரூ. 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் 28 நாட்கள் வீதம் கணக்கில் 12 மாதங்களுக்கு சலுகைகளை கொடுத்துள்ளது. இதில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் கிடைக்கும். மலிவான விலைக்கு வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கிறது.
மேலும், 3600 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுத்துள்ளது. ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளை கொண்டுள்ளது. இந்த சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுக்கும். இதைவிட கம்மியான விலை மற்றும் வேலிடிட்டிக்கு ஜியோ ரூ. 448 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.
அன்லிமிடெட் சலுகையில் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மொத்தமாக 1000 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சலுகைகள் கிடைக்கும். ஒருவேளை டேட்டாவுடன் அதிக வேலிடிட்டி வேண்டுமானால், கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ரூ. 2025 திட்டத்தை கண்ணை முடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ ரூ. 2025 திட்ட விவரங்கள் (Jio Rs 2025 Plan Details): 2025 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது 2026 ஆம் ஆண்டிலும் அதே விலைக்கு கிடைக்கிறது. 200 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொண்டுள்ளது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை கொடுத்துள்ளது.
மேலும், 200 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கும். ஆகவே, ஜியோ 5ஜி கஸ்டமர்கள் அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம். 4ஜி கஸ்டமர்கள் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அதற்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு மேலும் ஓடிடி சந்தா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த ரூ.2025 திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மொபைல் மற்றும் டிவி சந்தாவை இந்த திட்டம் கொடுக்கும். 3 மாதங்களுக்கு இந்த சந்தாவை பெற்று கொள்ளலாம். ஜியோ ஹோம் சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும்.


Click it and Unblock the Notifications








